எண்ணும்மை உம்மைத்தொகை
அவளும் நானும் எண்ணும்மை
அவள் அவன் உம்மைத்தொகை
உம் விகுதி வெளிப்படையாகின் எண்ணும்மை ...
மறைந்து வந்தால் உம்மைத்தொகை ...
------------------------------------------------------------------------
வரிகள் - எண்ணும்மை
---------------------------
( நிறைய சொல்லிவிட்டார்களே ...நான் என்ன சொல்லப்போகிறேன் ...ஆங் பாத்துப்போம் )
அவரும் நானும்
மழையும் குடையும்
அவரும் நானும்
உளியும் சிலையும்
அவரும் நானும்
இடியும் மின்னலும்
அவரும் நானும்
கனியும் காயும்
அவரும் நானும்
ஒளியும் ஒலியும்
அவரும் நானும்
நீரும் நெருப்பும்
அவரும் நானும்
உரிமையும் கோபமும்
அவரும் நானும்
சொல்லும் செயலும்
அவரும் நானும்
உயிரும் உணர்வும்
அவரும் நானும்
மூச்சும் பேச்சும்
அவரும் நானும்
அகமும் புறமும்
அவரும் நானும்
உயிரும் மெய்யும் .....
-------------------------------------------
வரிகள் -உம்மைத்தொகை
--------------------------------
நொதுமலாட்டியே
ராப்பகலா உன்னை காணாது தவிக்கின்றேன் ...
அல்லும் பகலும் பசி உறக்கம் இன்றி கிடக்கிறேன் ...
நிலவாய் தேய்கின்றேன் ...
சிறுகோட்டு பெரும்பழமாய் ஆனேனே மணவாட்டி ...
தூது போ என் புறாவே ...
அவள் எங்கே இருக்கிறாள் எனில்
இனி இங்கு இவன் அவள் இல்லாமல் வாழ்வானோ ...
அல்லி மலர்ச்செண்டை சூடிய
மெல்லிடையாள் ...
உயிர் மேனி எங்கும் நீயே மேவி
கண்ணாளா என்று நின்னையே அழைத்து நினைத்து
நூலிடையாளாக ...
படுத்த படுக்கையாகிவிட்டாள்
நின் பெயரை சொல்லியே சுவாசிக்கிறாள் ...
சிறு தூசியையும் தாங்க முடியா அவள் அங்கம் ...
மனம் முழுக்க உன்னையே சுமந்து கொண்டு ஜீவித்திருக்கிறது ...
அன்னம் தண்ணி இறங்கவில்லை ...
உன் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறாள் சிறு பொழுதும் ...
விரைவாக அங்கே சென்றான் ...
ஒருவரை ஒருவர் பார்த்துவிட்ட மகிழ்ச்சி முகத்தில் புன்னகையாய் ...
விரைந்து நொடிப்பொழுதில் அணைத்துக்கொண்டனர்
சிறு துரும்பையும் தாங்க முடியாது என்றார்கள் ...
அவள் மடி இன்று அவனை தாங்கிக்கொண்டது ...
பிழைக்கவே மாட்டாள் என்று சொன்ன வார்த்தை பொய்யாகி
அவள் இதயம் துடிக்கிறது ...
அவனின் மார்பில் சாயும் பொழுது ...
பல திங்கள் உண்ணா நோன்பால்
அவர் மடியில் மயங்கி விட
எல்லோரும் இறந்து விட்டாள் சொல்ல
அவன் மயங்கியபடியே
அவள் கரம் பிடிக்க அவள் கண்விழிக்கிறாள் ...
கரம் நழுவ அவளின்(அவனின்) உயிரும் உடலை விட்டு நழுவும் ...
இதை உணர்ந்த தலைவன்(தலைவி) ...விரலை கோர்த்துக்கொண்டான்(ள்) ...
இருவருக்கும் பிரிவை தந்தால் என்ன நடக்கும் என்பதை இயற்கையும் உறவும் நட்பும் அறிந்ததிங்கே ...
கணவனையும் மனைவியையும் பிரிக்க எண்ணிய கூட்டத்தின் திட்டம் பொய்யானது
இது ஈருயிர் அல்ல ...ஓருயிர் என்றே ...
இவர்கள் அன்றில் பறவைகள் ...
ஒன்றை பிரித்தால்
இரண்டும் இறக்கும் ...
ஒன்றின் மேல் ஒன்றை கோபமாக்கி பிரிக்க நினைத்தால் இயலாது ...
ஏன் என்றால்
உடலால் தான் இவர்கள் வேறானவர்கள் ...
உள்ளம் ஒன்றே ...
உயிரும் உணர்வும் வேறாகுமா !!...
~ பிரபாவதி வீரமுத்து