காதலே ஒரு நிமிடம்
என்னைக் கண்டேன்
உன்னில் நானே
ஆதலால் தானோ
உன்னை விட்டு
விலகிச் செல்ல
முடியாது தவிக்கிறேன் ...
என்னிடம் பேசாது
நீ விலகிச் செல்வது
இயல்பாய் இல்லை ,
எனை மறந்தது போல்
நடிக்க உன்னால் இயலவில்லை...
உன்னை நானறிவேன்
உன் மனம் என்னிடமே
ஆதலால் ,
எந்நாளும் உன்னை
நான் புரிவேன்....
உன்னோடு
நான் கண்ட
இந்தப் பயணம்
பாதை மாறி போகாது !
மரணம் தாண்டியும்
என் பயணம்
என்றும் தொடரும் உன்னோடு.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
