காதல் பயணம்
என்னவளே விரைந்து
வந்துக்கொண்டிருக்கிறேன்
வான் விட்டு பூமி
வரும் மழையின்
குதூகலத்துடன்
உன்னை காணும் ஆவலில் ...
அழகை மெருகேற்றும்
அணிகலன்களும் அழகில்
மெருக்கேறுகிறது உன்னோடு
ஒட்டி கொள்வதால் ...
என்னவளே உன் கண்களில் நீ இட்டுக்கொள்ளும் மையாக நான் இருக்க
வேண்டும் பேரழகாய் குத்தி திற்கும் உன் பார்வையில் நான் சங்கமம் ஆகி
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரில்
நான் உயிர் துறக்க ...