சுகமான சுமையே ...

சுகமான சுமையே
உன்னை சுமக்கும்
இந்த தருணம்
வாழ்வின் இனிமையான
பயணம்.......

குட்டிகருவே
முட்டி , மோதி
முத்தமிட
வருகின்ற
அன்பான தீவே....

உன் மலர்ப்பாதம்
மண்ணைதொட....

நான் உன்னை தொட
உன் எச்சில்
என் கன்னம் பட
வாழ்க்கை
விண்ணைதொடும்..........
நான்
என்னையே ரசிக்கிறேன் ...
உன்னாலே .....

உன் தலை கோதி
என் மடி சாய்ப்பது
எப்போது.....
நீ
தூங்கும்
அழகை
கண்டிட
நான்
தூங்கா விழி கொள்வேன்
அப்போது......

ஆயிரம் கவிதைகளை
நான் எழுதிய போது
என்னுள் ஏற்படாத
பரவசம்
உன்னை சுமக்கும்
இந்த நிமிடத்திலே
உணர்கிறேன்........

என்
உயிரே
உயிருக்குள்
உருவாகும்
உன்னதமே
நீ
அம்மா
என்றழைக்கும்
அந்த
நிமிடத்தை
நினைக்கையிலே
ஆயிரம்
வண்ணத்துபூச்சிகள்
சிறகடிக்கிறது...

இளம்பிறையே
உன்னால்
இன்று
என்
தாயின் அருமை அறிந்தேன்......
தாய்மையின்
பெருமையை உணர்ந்தேன்..........

அன்புடன்....
கார்த்தி,....

எழுதியவர் : எழில்கார்த்தி (21-Jul-11, 3:23 pm)
சேர்த்தது : ezhilkarthi
பார்வை : 545

மேலே