எது காதல்

காதலை பற்றி என்னயா தெரியும் உங்களுக்கு, காதல்ன என்ன தெரியுமா,
கடல் கடந்து போனாலும் மனைவி படத்தை பர்சுக்குள்ள வச்சு பதுக்கி
பதுக்கி பாக்குறானே அதுதான #காதல்
குடும்பத்துல சண்டையாவே இருந்தாலும் அந்த மனுசனுக்கு புடிக்கும்னு
நெஞ்செலும்பை மட்டும் தனியா எடுத்துவைப்பாளே மனைவி
அதுதான காதல்.!
ஏர் புடிச்சதுபோதும் வெரசா வந்து சாப்பிட்டு போய்யான்னு வரப்புல
ஒக்காந்து தூக்குவாளிய முந்தானையால விசிறிக்கிட்டு பட்டினியோட
ஒக்காந்துருப்பாளே மனைவி அதுதான காதல்.!
ஃபங்சனுக்கு இந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டு போகச் சொல்லுடான்னு
புள்ளைகிட்ட சொல்லுவாளே கோவத்தல பேசாத மனைவி
அதுதான காதல்.!
ஜம்பது வயசுலயும் கெழவிக்கி சளிபுடிச்சுருக்குன்னு சிரிச்சிக்கிட்டே
பொண்டாட்டி மூக்கை சிந்திவிடுவானே கெழவன் அதுதான காதல்.!
மத்ததெல்லாம், காதலா..!!

எழுதியவர் : ஷத்யபிரியா (6-Aug-17, 4:06 pm)
பார்வை : 108

மேலே