அவள் எங்கே
அவள் எங்கே
==========================================ருத்ரா
எனக்கு எதிரே
அவள் காட்டும் ஒவ்வொரு கணமும்
சந்திர கிரகணம் தான்.
இது
சந்திரனையே
சந்திரன் மறைக்கும்
சந்திர கிரகணம்.
அவள் முகம் காட்டி
மீண்டும்
அந்த முகத்தையே வைத்து
அவளை மறைத்துக்கொள்கிறாள்!
அவள் எங்கே?
====================================