ரோஜாவாய்
ரோஜாவாய்....
===========================================ருத்ரா
மனசுக்குள் எல்லாம்
மத்தாப்பூக்களின் மழை.
இந்த உலகம் எல்லாம்
அவன் உள் பாக்கெட்டுகளில்
வந்து விட்டதாய் பெருமிதம்!
அவன் இதயம்
எங்கிருந்து கொண்டு துடிக்கிறது
என்றே தெரியவில்லை.
எல்லோரது முகங்களிலும்
அகல அகல மாய்
சூரிய காந்திப்பூக்கள்!
எந்த பூவில் அவள்?
தெரியாமல் குழம்பினான்.
புரியாமல் புல்லரித்தான்.
ஊர்கின்ற மண் புழுவும்
ஆகாசத்து மின்னலைத்
தின்னத்துடிக்கின்றன.
முறுக்கேறிய இளமையே
இந்த இன்பக்கடலில்
குதித்து எதிர் நீச்சல் செய்!
ஆயினும்
இன்னும் ஆழத்தின் ஆழத்தின் ...ஆழத்தின்
ஒரு ஆழத்துள்
அவள் இருக்கிறாள்.
அந்த காதலை "ரீச்" செய்யும்
செல் நம்பர் உன்னிடம்
இருக்கிறதா?
மீண்டும் அவள் புன்னகைக்குள்
விழுந்து பார்!
ஏதேனும் ஒரு ஐ.பி அட்ரஸ் கிடைக்கலாம்.
உன் முயற்சிகளில்
சற்றும் நீ தளரல் வேண்டாம்.
உன் தோளில் தான்
காதல் எனும் அந்த
அழகிய வேதாளம்
சிரித்துக்கொண்டிருக்கிறது.
வாள் எல்லாம் மழுங்கி விடும்.
புன்னகைக்கு புன்னகையே
ஆயுதம்.
புறப்படு ஒரு ரோஜாவாய்!
=====================================================