தமிழ்
உறங்கிக் கொண்டிருந்த என்
அழ்மனதினை உயிர்மெய்யாய்
மலரச் செய்த செம்மொழி.
பொதிகை வனத்து கும்பன்
இவன் தமிழ் பொன் வடித்து
கற்றறிந்த பிள்ளைத் தமிழ்.
தொல்காப்பியம் பைந்தமிழின்
சான்றானதும் இலக்கிய இலக்கின்
கணமான காப்பியத் தமிழ்.
செங்கோல் பற்றிய பாண்டிய
இன்பத்தமிழ் கொண்டு உன்னை
போற்றியே நீரே சங்கத் தமிழ்.