இவள்
முட்ட கண்ணு முழி அழகு...
மூக்குத்தி மூக்கழகு...
மூன்றாம்பிறை வகுடு அழகு...
எட்டுக்கட்டை பல் அழகு...
கம்மலாடும் தோடழகு...
தமிழுக்கு மறுபெயர் இவளே...
கவிக்கு தமிழ் முதலே...
கொஞ்சும் தமிழில் தமிழும் பெருமைப்படும்
சிரிக்கும் அழகில் அண்டமும் அடிமைபடும்
தமிழ் தரும் சுவையும்...
இவள் நகைக்கு இணை நிற்காது...
தேன் தரும் தித்திப்பும்...
இவள் போல வாராது...
இவள் கரம் சேராமல்
என் ஆயுள் தீராது!!!