கொழம்பு தீஞ்சி போச்சி
அந்த குதிரை வண்டிக்காரரை பார்த்து கேட்டேன் .
"ஏம்ப்பா ..வண்டி வருமா ?"
"கொழம்பு தீஞ்சி போச்சி .வண்டி வராது ",என்றான் .
எனக்கு ஆச்சரியமாய் போய்விட்டது .உடனிருந்த அவன் மனைவியைக் கேட்டேன் .
"ஏம்மா ...குழம்பு தீய்ஞ்சு போனதுக்கா வண்டி வராதுன்னு சொல்றாரு ?"
"இல்லீங்க .குதிரைக்கு 'குளம்பு தேய்ஞ்சி போச்சி 'ன்றதைத்தான் அப்டி சொல்றாரு .அவர் குடிச்சிருக்காரு ",என்றாளே பார்க்கலாம் !
@இளவெண்மணியன்