ஒருபக்க காதல்கதை பாகம்-32

கணநேரத்தில் நடந்து முடிந்த சம்பவத்தை நினைவில் நிறுத்த சில நிமிடங்கள் ஆனது அவளுக்கு ...அதற்குள் அவனை சுற்றி எதையோ ஒன்றை ஈ மொய்ப்பதுபோல் மக்கள் கூட்டம் ..அவர்களை சமாளித்து அவள் அவனை வாரியெடுத்து ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருந்து ...வந்தபின் சற்று தயங்கி பின் அவனுடன் ஏறி ..அரைமணிநேர அண்ணா சாலை நெரிசலில் ஆஸ்பத்ரியை நோக்கி அரக்க பறக்கும் நேரத்தில்...அம்புலன்சின் நிழல்போல விடாமல் நான்கு, இருசக்கர வாகனங்கள் பின்வந்தனர் ..அம்புலன்சின் பின்சென்றால் அரைநிமிடம் முன்னே சேர்ந்துவிடுவதாய் அவர்கள் எண்ணம்..அற்பர்கள்...


அவள் ஊற்றிய காப்பியின் சூடு தணியவில்லை ..அவன் முகத்தில் ..முதல்கட்ட சிகிச்சை நிபுணர் வெட்டிய டிரெஸ்ஸிங் துண்டுகள் முப்பதை தாண்டியிருக்கும் ..கத்திரியின் "க்ரீச்" சத்தமும் ...கொட்டி ஓடும் அவனின் ரத்தமும் அவளை ஆம்புலன்ஸ் டிரைவரிடம் "சீக்கிரம் போங்கனா" எனக் கூறவைத்தது..எதிரே அவர்முன் ஆயிரம் நவீனமயமான ஆமைகள் ..ஊர்ந்துகொண்டிருந்தன ..அவரும் விடாமல் விரட்டிகொண்டிருந்தார்


ஒரு வழியாய் ஒருமணி நேரத்தில் அவனுக்கு அட்மிசன் கிடைத்து ..அரைமணி நேரத்தில் மருத்துவர் வந்தார் ..அவனை பார்த்துவிட்டு தொடை முட்டியில் தையல் போடவேண்டும் ..சில இடங்களில் எலும்பு நகர்ந்துள்ளது அவற்றை பழைய இடத்திற்கு மாற்றி அமைக்கவேண்டுமென மனதில் ஒரு எஸ்டிமேட் போட்டு 3 லட்சமென விலை பேசினார்..சற்று கால் செய்துவருகிறேன் என வெளியில் வந்தாள் எமர்ஜென்சி வார்ட் எனப் போட்டிருந்தது

அம்மா: சொல்லுமா எப்படி இருக்க?

அவள்: அம்மா எனக்கு கற்பபை மாற்று அறுவை சிகிச்சை நடக்கபோது ..நீங்க என்கூட இருக்கணும்போல இருக்கு கொஞ்சம் அரவிந்தன் ஆஸ்பத்ரிக்கு உடனே வாங்களேன்

அம்மா: என்னமா முன்னாடியே சொல்லக்கூடாது ..தோ உடனே வரேன்

அவள்: அம்மா, கேக்க கஷ்டமா இருக்கு கொஞ்சம் பணம் நெருக்கடி ...டாக்டர் திடீர்னு மூணு லட்சம் குடுத்தாதான் ஆபரேஷன்ங்கறார் இருக்குமா மா?

அம்மா: அவ்வளவு பணத்துக்கு ..நா எங்க ..

அவள்: ஒருவாரத்துல திருப்பி தந்திடறேன்மா ..இப்ப உடனே வேணும் அதான்

அம்மா: எதுக்கும்மா இப்டி விஷப் பரீட்சை உனக்கு ...சரி நீதான் பிடிவாதக்காரியாச்சே ..எடுத்துட்டு வரேன்

உள்ளே மகன் படுத்திருப்பதை பார்த்து கையில் இருந்த கைப்பை நழுவி கீழே விழுந்தது பின் அம்மாவும் ...தன் இறந்தகாலத்தின் ஆறுதல் ...எதிர்காலத்தின் மகிழ்ச்சி ...அங்கு பச்சைநிற கட்டிலில் பொட்டலமாய்...

அவள்: அம்மா ஒண்ணுமில்லமா ..சின்ன அடிதான் ..ரெண்டு தைய்யல் போட்டா சரியாயிடும் ..எழுந்துருங்க மா .. தைரியமா இருங்க..எழுந்திரிங்க..நர்ஸ் இவங்கள கொஞ்சம் புடிங்களேன் ..


அம்மா, ஏதும் பேசாமல் சுவரோரம் சாய்ந்து ஒருபக்கமாய் தன்மகனை ..அந்த விகாரமான முகத்தை..கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் ..அவள் கைபையில் இருந்தக் காசை எடுத்து அனைத்து சம்ப்ரத்தாயங்களையும் அதிவிரைவில் முடித்தாள்..

உள்ளே அவனுக்கு சலைனில் விழும் சொட்டு, வெளியில் அம்மாவின் கண்களில் வழி வழிந்தோடின...

அவள்: அம்மா ...ஒண்ணுமில்லமா ..எல்லாம் பண்ணியாச்சு ..பயப்படறதுக்கு ஒண்ணுமில்லன்னு டாக்டர் சொல்லிடாரு..என்ன பாருங்க ..ஏதாவது சாப்டீங்களா..பேசுங்க மா..இங்க பாருங்க

என அவளின் அழுத்த மௌனத்தை அசைக்கப் பார்த்தாள்..அவளோ எதற்கும் வளைவதாய் தெரியவில்லை..அவளின் மௌனம் கலைக்க நர்சை கூப்பிட்டு அவனுக்கொன்றுமில்லை எனக் கூறச்சொன்னாள்..பயனில்லை ...இரண்டு மணிநேர போராட்டத்திற்கு அப்பால்..தலைமை மருத்துவர் ஆபரேஷன் முடித்துவிட்டு வெளியில் வந்து...

மருத்துவர்: அம்மா..உங்க பைய்யனுக்கு ஒண்ணுமில்லமா மைனர் பிராக்சர் தான்..கவலப்படாதீங்க ..குணமாகிடும்.."என்றார் கடவுள் குரலில்

அம்மா: பேசக் குரல்வராமல்..வீலென அழ ஆரம்பித்தாள்..அவளைக் கட்டிபிடித்து..

அவள்: அம்மா ஒண்ணுமில்லமா ..எல்லாம் சரி ஆயிடும்..என அவள் முதுகில் தடவிக்கொடுத்துக் கொண்டே சிறுப் புன்னகை உதிர்த்தாள்..பின் தன்கண்ணத்தை தொட்டுபார்த்தாள்.. சற்று வீங்கியும் வெகு ஈரமாகவும் இருந்தது..சிறிது கருமை நிறமும் கை ஒட்டியது...பின் கண்ணாடிக் கதவில் பார்த்தாள்...அவள் கண்களில் வெகுநேரமாய் கண்ணீர் வந்திருந்தத் தடயம் பதிந்திருந்தது..கண்ணாடிக்குப் பின் அவன்

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (16-Aug-17, 10:43 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 243

மேலே