நேற்றைய நிழல்கள்
நேற்றைய நிழல்கள் துணை வந்தால் வாழும்
வாழ்க்கையும் சிரமம் இல்லை
சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து நின்ற நிழல்கள்லே
போதனை தரும் நிழல்களாக வாழ்வதற்கு வழிகாட்டுகின்றன
நடக்க போகும் பாதை எல்லாம் கரடு முரடு என்றாலும்
பாதை யோரம் நிழல் தரும் உள்ளங்களின் நம்பிக்கையால் நினைவுகள்(நிழல்கள் )
மட்டும் நியம்மாகி வாழ்வும் கடந்து செல்கின்றது
நீ தேடும் நிழலும் வாழ்வில் கிடைப்பதில்லை
நிழல் தரும் உள்ளங்களையும் திரும்பி பார்ப்பதில்லை
இருக்கும் வரை இது புரிவதில்லை
நேற்றைய நிழல்கள் சுகம் தந்தன
இன்றைய நிழல்கள் யாவும் வெண்மையாகி போனதால்
இன்று சுகம் தரும் நிழல் தேடி அலைகிறோம்
நிழல் தரும் உள்ளங்களை மறைய செய்வதும் வாழ வைப்பதும்
உன் கையில் மானுட
நேற்றைய நிழல்களை
தந்த இயற்கையை
நீ இழந்தால்
உன் வாழ்வும் என்னவாகும் சிந்தனை செய் மானுட