போர்க்களம் - 2
பாகம் 2
சிந்து தீவின் பூக்காடு கிராமம்.
சமுத்திராவும் அவன் நண்பன் ப்ரித்விராஜும் போட்டி போட்டுகொண்டு தங்களின் குதிரைகளை முன்னோக்கி செலுத்துகின்றனர். வழக்கம்போல் சமுத்திரா வெற்றி கொண்டான். நாளைக்கும் நான்தான் கேணியில் தண்ணீர் இறைக்க வேண்டுமா என்று கவலையோடு பிரித்விராஜ் கூறுகிறான். அதை கேட்டு சமுத்திரா புன்னகிக்கிறான்.பிறகு இருவரும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீடு திரும்புகின்றனர்.
சமுத்திராவின் தந்தை பெயர் அசோகா. சிந்து தீவின் வடக்கு மலைப்பகுதியின் படை தளபதியாக இருந்தவர். சிறந்த போர் வீரர், ஆனால் சமுத்திராவுக்கு பன்னிரண்டு வயது இருக்கும் பொழுது அவர் போரில் வீர மரணமடைந்தார். சமுத்திராவின் தந்தைக்கு தன் மகனை சிறந்த போர் வீரனாக ஆக்க வேண்டும் என்பது ஆசை. அதனால் சமுத்திராவுக்கு சிறு வயதில் இருந்தே போர் பயிட்சிகளை கொடுத்தார். சமுத்திராவும் தன் தந்தையை போல சிறந்த போர் வீரனாக உருவாகினான்.
தந்தையின் மறைவுக்கு பிறகு தங்களின் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து தன் அம்மா திலகவதி மற்றும் தங்கை மீனாவுடன் சந்தோசமாக சமுத்திரா வாழ்ந்து வந்தான். சமுத்திராவுக்கு சிந்து தீவின் குதிரை படையில் சேர்ந்து கொள்ள அரசவையில் இருந்து விண்ணப்பம் அனுப்பப்பட்டது. ஆனால் தன் தாய்க்காகவும், தங்கைக்காகவும் அதை நிராகரித்துவிட்டான்.
இன்று தங்கை மீனாவுக்கு கல்யாண நிச்சயதார்த்தம். அனைவரும் மிகவும் சந்தோசதோடு கூடி பேசி கொண்டிருந்தனர். நிச்சயதார்தமும் சிறந்த முறையில் முடிய சமுத்திரா தன் அம்மாவுடன் சேர்ந்து ஆனந்த கண்ணீர் சிந்தினான். அனைவரும் அந்த நிச்சயதார்ததை ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்தனர்.
ஆனால் அந்த சந்தோஷம் வெகு காலம் நிலைக்கவில்லை.