என்று சொல்

இன்னும் நிறைய
இருக்கின்றன..
உன் மனச்
சுரங்க அறைகளில்..

எத்தனை
கோடிக் கதைகள்
எழுதப்படாமல்
பேசப்படாமல்
அவர்களோடு
மக்கிப் போயின.

நம்
மூதாதையர்கள்
வாழ்ந்தார்கள் என்று
சொல்லாதே
செத்தார்கள் என்று
சொல்.

எழுதியவர் : கனவுதாசன் (20-Aug-17, 10:37 am)
Tanglish : enru soll
பார்வை : 62

மேலே