என் வாழ்க்கை

சின்ன கிராமத்தில் அழகாய் ஒரு வீடு
அன்பால் வீடு நிறைக்கும் என் அம்மா
என் ஆசை பொதி சுமக்கும் என் அப்பா..
எனக்கென தாய் தந்த முதல் சொந்தம் என் அக்கா..
தவழ்ந்து ஓடியது விழுந்து அழுதது...
அவ்வளவு ஞாபகம் இல்லை ..
அழுகையுடம் தான் ஆரம்பித்தேன் ஆரம்ப பள்ளியை...
துள்ளி திரிந்த பள்ளி காலமாக மாறியது
வடிந்த கண்ணீரின் சுவடுகள் கூட அங்கு நிர்க்கவில்லை ..
என் விளையாட்டு விழாவில் என்னை ஊக்குவிக்கும் என் தந்தை ..
என் பரிசு பார்த்து பெருமை பட்ட என் தாய் ..
பேச்சு போட்டியில் நான் பெற்ற முதல் தோல்வி..
அழகான ஆரம்ப பள்ளி காலம் ஆயிரம் நட்புடன்..

ஊர் எல்லையில் ஒரு அரசு பள்ளி ..
கூட்டம் கூட்டமாய் நடந்து செல்லும் நாங்கள்..
தோழிகளின் உரையாடலில் தூரம் மறந்த நாள்கள் ..
சின்ன சின்ன எதிர்பார்ப்புகளின் அர்த்தம் புரிந்த நாள்கள் ..
நண்பனாய் அவனை கண்ட நாள்கள்...
என் தோழியின் தாய் எனக்கு அனுப்பும் உணவு ..
விடுமுறையில் கைதொழில் கற்ற காலம்...
முதலில் சந்தித்த பொது தேர்வு..
எனக்கென ஒரு தோழி..
சனிக்கிழமையின் கூடுதல் வகுப்பு...
தினம் எழுதி தீர்த்த தேர்வுகள்...
ஒரு பாடத்தில் மட்டும் குறையும் மதிப்பெண்...
நம்ப முடியாத தேர்வு முடிவுகள்...

கனவுகளுடன் ஆரம்பித்த கல்லூரி வாழ்க்கை..
கட்டணம் குறைவு என தேர்வு செய்த அரசு கல்லூரி...
விடுதி என்னும் சிறையில் தனியான நான்...
என்னை விட்டு நெடு தூரம் சென்ற அவன்...
எப்போதாவது பேசும் பள்ளி தோழி..
தொலைபேசியில் தொடர்ந்த பள்ளி காலம்..
கண்ணீரை பரிசாய் பெற்ற நண்பனின் வாழ்த்து அட்டை..
கண்ணீர் பட்டு கரைந்து ஓடிய என் கவிதைகள்...
தேர்வுக்கு முன் நீண்ட இரவுகள்..
வீடு செல்லும் போதெல்லம் உடன் வந்த ஒரு தோழி..
எனக்கென பேசும் இன்னொரு தோழி...
இவர்கள் மட்டும் தான் அங்கு நான் பெற்ற என் சந்தோசம்..
நான்கு ஆண்டுகள் கல்லூரி ஏனோ ரசிக்கமுடியாத என் பயணம்..

வேலை தேடி அலைந்த நாள்கள்...
தொடர் தோல்வியில் துவண்ட காலம் ..
ஒவ்வொரு முறையும் தேற்றிய என் நண்பன்...
கூட்டத்தில் தனியாய் உணர்ந்த நாள்கள்...
முதல் வேலையில் கிடைத்த சந்தோசம்..
நீண்ட என் பேருந்து பயணங்கள்..
வாழ்க்கைகாக நானும் ஓட ஆரம்பித்த நாள்கள்..
என்னுடனேயே தங்கி விட்ட என் தனிமை...
அங்கு ஆரம்பித்த அவனுக்கான தேடல் ...
அடுத்தடுத்து மாறிய வேலைகள்..
அனுபவம் தந்த அலுவலகங்கள்..
அனைத்துமாய் மாறிய அவன் நினைவுகள்..
வீட்டிற்கு ஏதோ செய்கின்றோம் என்ற ஒரு சந்தோசம்..
எனக்கென யாரும் இல்லையே என்ற வருத்தம்...
நான் நிறைவேற்றிய என் தந்தையின் கனவுகள்...
என் மகள் என கர்வமாக என் பெற்றோர் கூறிய நிமிடங்கள்..

என்று தீரும் என் வாழ்க்கை தேடல்.....

எழுதியவர் : நான் (23-Aug-17, 1:49 pm)
சேர்த்தது : Kavitha
Tanglish : en vaazhkkai
பார்வை : 467

மேலே