இவளும் அன்னையே
அன்பே...
நீ எந்தன் உயிரில் பாதி
என் இதய துடிப்பின் மீதி
வாழ்க்கையின் பாதை
முழுவதும் நீ என்னோடு
பயணிக்க இறைவன் அனுப்பிய இன்ப வாழ்க்கைத்துணை...
என் வாழ்க்கையில்
தாய்துணை எல்லா
தருணங்களில் இருக்காது
என அறிந்து இறைவன் காட்டிய
இன்னொரு தாய் நீ...
என் இன்பம் துன்பங்களில்
பங்கு கொண்டு என் வழியில்
முள்ளெடுத்து பூ விரித்தாயே
உன் தேவை நான் அறியுமுன்பே
என் தேவையை நீ அறிந்தாயே...
மனைவியெனும் மந்திரி
நீ இருப்பதனால் ராஜாவாக
என் நடை உறவுகளின் மத்தியிலே
என் மனம் சஞ்சலிக்கும் போதெல்லாம் குருவாக
உன் வார்த்தைகள் இருப்பதால்
நீதிமானாக சமுகத்திலே என் வலம்...
எனக்காக எல்லாம் தாங்கும் ஜீவனே
இது உனக்கும் எனக்கும்
பூர்வஜென்ம பந்தமா...?