உயிரை கண்ணீரில் மூழ்கடித்தவள்

வெறி கொண்ட மட்டும் அடித்து ஓய்ந்திருந்தது மழை.மழையோடு மின்சாரமும் கண்ணாமூச்சி விளையாட ஆரம்பித்து விட்டது போல.கும்மிருட்டால் சமையலறை வரை சென்று தீப்பெட்டியையும் மெழுகுதிரியையும் தடமடித்து தேடி தீக்குச்சியை உரசிய போது ஜன்னல் வழியே அந்த உருவத்தை பார்த்து நெஞ்செல்லாம் உதறலெடுக்க ஆரம்பித்தது..

இறைவா அது அவளாய் மட்டும் இருக்கவே கூடாது என்று மனம் வேண்டிக் கொண்டது,
கல்லூரியில் பார்த்த பழகி ஒருதலையாய் விரும்பியவளை இப்படி உருக்குலைந்து பார்த்ததும் கால்கள் தானாகவே வீதியை நோக்கி நகர்ந்தது..

கல்லூரி முடித்து வெளிநாடு சென்று விட்டு மூன்று நாள் முன்புதான் ஊருக்கு வந்திருந்தான்.வந்ததுமே அவளை பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்து இருக்க மாட்டான் போல..
அவள் பக்கத்து கடையில் மெழுகுதிரி வாங்குவதற்காக வந்திருக்கிறாள் போலும்,அவள் கையில் வைத்திருந்த மெழுகுதிரி மெய் சாட்சியம் பகர்ந்தது.
அவள் திரும்ப என்னை கடந்து செல்வதற்காக ஓரமாய் நின்று சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன்..ஐந்து வருட இடைவெளி வாழ்க்கை சிகரெட்டை போல எவ்வளவு சீக்கரமாய் கரைந்து போயிருக்கிறது.

மாலதி கல்லூரில் எல்லோரையும் போல அழகுதான் ஆனாலும் கார்த்திக்கின் மனசிற்க்கு அவளை தவிர வேற யாரும் அழகில்லை என்ற கர்வமுண்டு..
ஒவ்வொரு நாளும் அவளுடன் பேசும் போதும் தன் காதலை சொல்லாமல் தள்ளி போட்டு தள்ளி போட்டு கல்லூரியின் இறுதி காலமே வந்து விட்டது.ஒரு நல்ல தோழியை காதல் என்ற ஒரு வார்த்தை காயப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் தடுமாறி காதல் சொன்னவனை மௌனத்தால் கடந்து சென்றாள்.காதலும் நட்பும் தன்னை விட்டு விலகி செல்லுவதை போல கண்ணீரை மறைத்து கொண்டு விடை பெற்றான்..

சிகரெட் விரல்களை சுட கையை உதறி கொண்டு அசை போட்ட நினைவலையிலிருந்து திரும்பினான்.அதற்குள் அவளும் அவனை கடக்க சரியாய் இருந்தது..
டேய் கார்த்திக் என்று மாலதியின் குரல் கேட்டதும் மனசெல்லாம் படபடப்பும் சந்தோஷமும் பழைய காதலும் தொற்றிக் கொண்டது..
ஹாய் மாலதி என்ற வார்த்தை அவன் தொண்டை குழியிலிருந்து வெளியேறுவதள்குள்,
இதோ வந்திட்டேம்மா என்றவாறு கடையிலிருந்து அவள் மகன் கார்த்திக் ஓடி வந்தான்..

மீண்டும் ஒருமுறை கண்ணீர் துளிகள் கசிய ஆரம்பித்தது அவளை நினைத்து அவனுக்குள்...

எழுதியவர் : சையது சேக் (27-Aug-17, 4:10 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 489

மேலே