அர்த்தநாரி

அர்த்தநாரி . .

காற்றதன் வேகத்தில்
ஒருபுறம் ஒருக்களிக்கும்
தோகை தனை தாளாது
நடை பயிலும்
அந்த ஆண் மயிலின்
கண்களில் . . .
இடை தாளாது
கொடி நடை பயிலும்
பெண்மகளின்
பிம்பம் . .
அர்த்தநாரியாய் . . .

சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (27-Aug-17, 4:50 pm)
பார்வை : 113

மேலே