என் வாழ்வில் ஒருத்தி
ஒருத்தி என் வாழ்வில் வர வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த
ஒருத்தி என் வாழ்க்கையை சொர்க்கமாக ஆக்க வேண்டும் என்று ஆசை பட்டேன். அந்த
ஒருத்தி என் கனவு கன்னியாக இருந்து எனக்கு சந்தோஷம் தர வேணும் என்றுஆ சைப் பட்டேன். அந்த
ஒருத்தி எப்படி இருப்பாள் என்று சதா யோஜனை பண்ணி கிட்டு இருந்தேன்.
என் ஆசையை புரிந்து கொண்ட என் அப்பா அம்மா எனக்காக பெண் பார்த்தார்கள்
நான் கனவு கண்டு வந்த பெண் போல இருக்க வேண்டும் என்று முருகனை வேண்டிகிட்டேன்.
பெண் ஒருவள் நான் ஆசைப் பட்டது போல கிடைக்க இவ்வளவு கஷ்டமா
'அவன்' என் தலையிலே அப்படி எழுதி இருக்க வேண்டுமே??
ஒரு வழியாக ஒரு பெண்னுடன் எனக்கு கல்யாணம் ஆகியது.அவன் வயித்தில் ஒரு
கரு உருவானது.எங்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
மறு கணமே அவள் உண்மை சொரூபம் தெரிய வந்தது.என் அப்பா அம்மாவை விட்டு
பிரிந்து வாழ்ந்து வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்
அப்பா அம்மா முக்கியமா, எங்கு இருந்து வந்தவ முக்கியமா என்று புரியாமல் தவித்தேன்
தப்பான காரியம் பண்ணி விடப் போறேனோ என்று பயந்தேன்.
எப்படா இவை தன் தனி குடித்தன மோகத்தை விடுவாள் என்று பல தடவை அவ கிட்டு பேசி பார்த்தேன்.
அப்பா முருகா இவளுக்கு நல்ல புத்தி தாயேன் என்று என் குலா தெய்வத்தை வேண்டினேன்.
அவ பிடிவாதம் தான் கடைசியிலே வென்று நான் தனி குடித்ததனம் போனேன்.
தவம் இருந்து பெத்த அம்மா அப்பாவை தவிக்க விட்டு நான் போனது சரியா?? இல்லை என்னுடைய
அவ சந்தோஷம் முக்கியமா எனக்கு புரியவில்லையே.என் அப்பா அம்மா
பாவம் இல்லையா??
பெத்தவங்க முக்கியம்ன்னு நான் தனி குடித்தனம் போவாம இருப்பது சரியா
முத்தம் கொடுத்தவ முக்கியம்ன்னு நினைச்சு தனிக்குடித்தனம் போனது சரியா??
மத்தவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க???
தத்துவம், நியாயம் தர்மம் எல்லாம் நான் பேசி ஒரு வழியும் கிடைக்கலையே?
என்னை போல இரு தலை கொள்ளி எறும்பு போல தவிக்கிறவங்க இருக்காங்களா?
என்னை போல முடிவு எடுத்தவங்க சரியானவங்களா? இல்லை
என்னை போல முடிவு எடுக்காம பெத்தவங்க முக்கியம்ன்னு 'வந்தவளுக்கு' புரிய வச்சீங்களா?
என்னை ஒரு கோழைன்னு முடிவு கட்டி விட்டிங்களா?
சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க????
'
.
.