காதலுக்கு முதுமையில்லை

ஒரு இரவு பொழுது,
நட்சத்திரமும் நிலவுமற்ற ஆகாயம்,
மங்கலான ஒளி பாய்ச்சப்பட்ட குடில்,
குவளையில் தள்ளாடியபடி தேனீர் கொஞ்சம்,
ஜன்னல் வழியே ஊடுருவிய குளிர்ந்த காற்றும்,
அதனோடு கலந்து வரும் தோட்டத்து பூக்களின் நறுமணம்,
தொலை தூரத்தில் ஒலித்த ஜோடி பூனைகளின் முனக்கல் சப்தம்,
நிசப்தம் கலையத்திருந்த நெருக்கமான தருணம்,
வயோதிகத்தின் வாயிலில் நின்றிருக்க,
தன் விரல்களால் கேசம் கோதி அரவணைதவளை பார்த்து சொன்னான்,.

இந்த இரவின் நீளம்,
நான் இறக்கும் வரை தொடரட்டுமே என்று..

எழுதியவர் : சையது சேக் (29-Aug-17, 1:54 pm)
பார்வை : 93

மேலே