காலம் விரைகிறது

பொன் குலேந்திரன் (கனடா)

அவர் வளர்ந்தவர்
நான் சிறியவள்
எங்களிலும் வளர்ந்தவர் இன்னொருவர்
மிக உயரமனவர் வேகமாக அசைகிறார்
அவரை விட வளர்ந்தவரின் வேகம் குறைவு
சிறியவள் நான் அசைகிறேன் மெதுவாக
என்னை அணைத்து முத்தமிட
ஒரு மணி நேரம்
என்னைத் துரத்துகிறார் வளர்ந்தவர்
எங்கள் இருவரையும் அடிக்கடி
முத்தமிடுகிறார் மிக வளர்ந்தவர் .
மூவரும் ஓன்று சேர்ந்து,
உங்கள் முடிவை நோக்கி!
காலம் விரைகிறதைக் காட்டுகிறோம்
எனக்கு நேரம் இல்லை
என்ற பேச்சு வேண்டாம்
உனக்கு இறைவன் தந்த காலத்துக்குள்
நல்லதைச் சிந்தி,
நல்லதைப் பேசு.
நல்லதைச் செய்

******

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (31-Aug-17, 7:26 pm)
Tanglish : kaalam viraigirathu
பார்வை : 112

மேலே