சிந்திப்பு

உண்மை கற்பனையாகிறது இருள் படிந்த மனங்களாலே...

இருள் என் மனதை பற்றியதோ என்ற சந்தேகமே பலரை இருளுலகிற்கு வரவேற்கிறது வெற்றிலை பாக்கு வைத்து...

என்னுடைய மீட்பன் என்னுள்ளும்,
அவருடைய மீட்பன் அவருள்ளும்,
உங்களுடைய மீட்பன் உங்களுக்குள்ளும்
இருக்கிறான் இறைவன் தந்த வரமாய்...

அந்த மீட்பன் வெளிப்படும் நேரம் இந்த மானுடம் அறியும் மானுட தருமம்...

குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் உடல் பெருத்துவிட்டால் அதிலே நோயும் குடிகொண்டு உயிரைப் பறிக்குமே விஷமாய்...
மனித சிந்தனையும் அது போலே...
சிந்திக்காத அறிவும் விரைவில் கெடுமே...

உனக்கு புரியாது என் வாக்கு...
புரியவைக்கும் காலத்தின் போக்கு...

மிரட்ட வரும் மனங்களை மின்னல் தாக்கும் விந்தையாய் ஒரு சேதி தரும் காலத்தின் பரிசாய் சேதியென்ற அனுபவம்...

அகந்தை இல்லை...
அகம்பாவம் இல்லை...
அதிகாரம், ஆயுதம் கொண்டு கொல்ல வந்தால் ரௌத்திர ரூபம் தரித்து வேட்டையாடு பாவம் இல்லை...

தலைக்குள் ஒரு நெருப்பு...
என்றும் அணையாத அடுப்பு...
அது சிந்திப்பு...
மனித இனத்தின் சிறப்பு...
அன்பும், கருணையும் அடிப்படையானால் என்றென்றும் தித்திப்பு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Sep-17, 8:13 am)
பார்வை : 1172

மேலே