நெஞ்சமெல்லாம் உன் நினைவே
வீதியிலே நடந்துவரும் அவளைக் கண்டேன்!
..... வானத்தின் மின்னலிலும் அவளைக் கண்டேன்!
சோதிமுகம் அழகினைக் கொண்டி ருந்தாள்
..... சோலையின் மலர்களின் சிரிப்பைத் தந்தாள்
மாதரே மயங்கிடும் அழகைக் கொண்டாள்
..... மண்மீது வந்திட்ட தேவ தைப்போல்
காதோரம் வந்தொரு செய்தி சொன்னாள்
..... காதலிக் கிறேனென்று சொல்லிச் சென்றாள்
தங்கத்தால் செய்திட்ட மேனிக் கொண்டாள்
..... தமிழச்சி என்றவள் பெருமைக் கொண்டாள்
திங்கள்போல் பொலிவான முகத்தைக் கொண்டாள்
..... சிரித்தாலே கன்னத்தில் குழியைக் கொண்டாள்
எங்கிருந்து வந்தாளோ தெரிய வில்லை
..... என்னையிவள் முழுவதும் கவிழ்த்து விட்டாள்
மங்கையிவள் என்மீது காதல் கொண்டு
..... மனம்முழுதும் நினைவாலே நிரப்பிச் சென்றாள்
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்