அடகு கடையில் அழகு நாடு

#அடகு கடையில் அழகு நாடு

வடநாட்டு அடகு கடையில்
தமிழ்நாடு
அடகு வைத்தவர்களுக்கு
ஆதாயம் நிறையவாம்...!

அடகு பொருளுக்கு
கண்ணீர்தான் வட்டித்தொகையாம்
மீட்டெடுக்க இயலாமல் தான்
இன்று மீட்டர் வட்டியாய்
அனிதாவின் உயிர்..!

மீட்டெடுப்போமோ
இல்லை
அனிதாவுக்கு
துணை போவோமோ..?

கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்
உங்களுக்குள்ளாகவே
இன்று அவள்
நாளை யாரோ..?

மீட்டர் வட்டியில்
விழும் எலும்பு துண்டுக்காய்
குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது
கறையணிந்த கறை நாய்கள்..!

மௌனித்திருந்தால்
தமிழ்நாடு மூழ்கிவிட்டதென்று
ஏலம் விடக்கூடும்..!

விழித்துக்கொள்ளுங்கள்
விடியல்
விடைபெறுவதற்குள்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ. சாந்தி (2-Sep-17, 9:08 am)
பார்வை : 188

மேலே