காலத்தை வென்றவன்

கொஞ்சம் அதிகமாகத்தான் தன்னை பரப்பிக்கொண்டிருந்தது மழை . காலை நேரம் சூரியனை தொலைத்துக் கொண்டுஇருந்தது வானம். ஒரு பழைய குடையுடன் நின்று கொண்டிருந்தார், அருப்பத்தைந்தை தன் அகவையாய் கொண்ட ' ஆல்பர்ட்'.
அவர் வாழ்நாளில் பெரும் பகுதியை வறுமை விழுங்கி இருந்தது . ஒரே ஒரு மகன் அவனும்
தன்னை முழுவதும் வியாபாரத்தில் தொலைத்து கொண்டான். எப்போதும் இழந்ததை நினைத்து கொண்டிருக்கும் மனைவி 'மெலிவா'. இப்படி தன் வாழ்நாளை வாழ்ந்திருக்கிறார் 'ஆல்பர்ட் '. இப்போதும் பள்ளி குழந்தைகளுக்கு வீட்டில் பாடம் நடத்துகிறார். எந்த பந்தமும் விரும்பாத மனிதர், என்ன குறிக்கோளென்று இன்று வரை தெரியாமல் நடமாடும் ஒரு ஆத்திகர். எப்போதும் முடிந்தவரை உண்மையையும் ,நேர்மையையும் தவறவிடாத ஒரு போராளி. எங்கோ தனக்கான ஒரு இடம் உள்ளது என்று இன்றும் நம்பிக்கொண்டு இருக்கும் ஒரு சாதாரண உழைப்பாளி .

மழை கொஞ்சம் கருணைக் காட்டியது ..... ஒய்யாரமான அந்த காலனி சாலை மிகுந்த அமைதியுடன் மழை துளிகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. மெதுவாக எதோ ஒரு புதிய உலகிற்குள் பயணிப்பதாய் நினைத்து சாலை ஓரமாக நடக்க தொடங்கினார் ஆல்பர்ட் . இலைகள் எல்லாம் ஏதோ புதிதாய் பச்சை வண்ணம் தீட்டப்பட்டது போல் காட்சி தந்தது.

காலனியிலுள்ள ஒரு அடுமனையில் ரொட்டி வாங்கி வரும்படி சொல்லி இருந்த மனைவியின் குரல் அலையாய் மின்னியது. காலனிக்கு அவர் வீட்டிற்கும் ஒரு குறுக்கு வழி உள்ளது அதில் எப்படி மெதுவாக நடந்தாலும் அரைமணி நேரத்திற்குள் சென்று விடலாம்.

அவருடைய எச் . எம். டீ கை கெடிகாரம் சரியாக காலை எட்டை எட்டி இருந்தது. எதோ ஒரு யோசனையில் நாடக்க ஆரம்பித்தார் ஆல்பர்ட் . நடைபாதையில் ஒரு நாயை பார்க்கிறார். அந்த நாய் மழையிடம் போராடி தன்னை மீட்டது , இவருடைய வறுமை கண் முன்னே திரை சிலையாய் விரிந்தது.

குடையை அக்குளில் வைத்துக் கொண்டு தன் நடையைக் கூட்டிக் கொண்டார் ஆல்பர்ட் .
அப்போது அவரை ஒருவர் திடீரென வழி மறைக்கிறார் .

திடுக்கிட்ட ஆல்பர்ட் பின்னர் சுத்தகரித்துக் கொள்கிறார். அவர் வேறு யாரும் இல்லை அவருடைய பள்ளி நண்பர் வின்சென்ட் .

"அலேபேர்ட்டு உன்னை எத்தனை தாட்டி கூப்படறது " என்றார் வின்சென்ட் உரிமையுடன்.
"எங்க பார்த்த ..... என்னை? எப்போ பார்த்த ...". என்றார் ஆல்பர்ட்

"இப்போ தான் சரியாய் ஒரு 8 .௦௦ இருக்கும் , நன் பால் வாங்க வந்தேன். பால் வண்டி கரெக்டா 8 .௦௦ மன்னிக்கு வந்துரும். அப்போ தான் உன்னை பார்த்தேன் நீ ஒரு நாயை வேடிக்கை பார்த்திட்டு இருந்தே ... அதுனால உன் காதுல விழுந்திருக்காது , நானும் வரிசையில நின்னுட்டு இருந்தது நாள வரமுடியுல.. சரி இப்போ எப்படி போகுது உன் வாழ்க்கை " என்று மூச்சு விடாமல் முடித்தார் வின்சென்ட்.

"ம் ..... போகுது பெருசா ஒன்னும் இல்ல " என்றார் ஆல்பர்ட் சற்று வருத்தத்துடன் .
சரி கலா மன்றத்துள்ள ஒரு இலக்கிய விழா இருக்கு இந்த ஞாயற்றுக்கிழமை மறக்காம வந்துரு சரியா மீதி அங்க பேசிக்கிலாம் வருட்டா ..." என்று விடை பெற்றுக் கொண்டார் வின்சென்ட்

மழையின் மூர்க்கம் சற்று தெரிந்து இருந்ததால் ,தன் நடையை சற்று அதிகப்படுத்திக்கொண்டார் ஆல்பர்ட்.
வழியில் சேறும் ,சகதியும் சாலையை அலங்கார படுத்தி இருந்தது.
வீட்டின் முகப்பை அடைந்தவுடன் சற்று மனம் மகிழ்ந்தார்.

மனைவி அடுப்படி வேளையில் சற்று மும்முரமாக இருந்தார் .

வாங்கி வந்த ரொட்டியை வைத்து விட்டு , நாற்காலியில் அமர்ந்தார் ..
அமர்ந்தவர் சுவர் கடிகாரத்தை பார்த்ததும் திடுக்கிட்டார் ...

மணி 8 :05 ஐ எட்டி இருந்தது .

உடனே ஆல்பர்ட் தன் எச் . எம். டீ கை கடிகாரத்தை பார்த்தார். அதிலும் 8 :05 ஐ காட்டியது ..

சற்று தலை சுற்றுவதை போல் இருந்தது .. எதோ கனவில் எழுந்து உட்கார்ந்தது போல இருந்தது ... மூளைக்குள் ஒரு விதமான ரசாயன மாற்றம் அரங்கேறியது போல தோன்றியது .

" 8 .௦௦ மன்னிக்கு அங்கிருந்து புறப்பட்டோம் , எப்படி................ம் 8 : 05 க்கு இங்க இருக்கோம்
நம்ம கடிகாரம் சரியா தான் காட்டுது , அப்படியே தப்பாக் காட்டினாலும், வின்சென்ட் என்னை அங்க சரிய 8 : ௦௦ மணிக்கு பார்த்ததா தானே சொன்னான். அப்பறம் எப்படி வெறும் ஐந்து நிமஷத்துல வந்து சேர்ந்தேன். பறந்தே வந்தாலும் முடியாதே ...."

ஆல்பர்ட் தனக்கு தானே பேசிக்கின்ற .

"என்னங்க வந்ததிலிருந்து ஒரே யோசனையா இருக்கு ? என்னாச்சு உங்களுக்கு...." என்று ஒரு ஆச்சர்யக் குறியாய் வந்து நின்றாள் ,மெலிவா.

நடந்ததை விளக்கினார் ஆல்பர்ட் .

"என்னங்க இது ஒரு பெரிய விஷயமா ..... உங்க கடிகாரமும் , வின்சென்ட் கடிகாரமும் தப்ப மணி காட்டி இருக்கு . நீங்க 7 :30 மணிக்கே அங்கிருந்து கிளம்பி இருப்பிங்க , அதே போல் பால் வண்டியும் நேரத்துல வந்திருக்கும் . நீங்க இப்போ நம்ம வீட்டுல பாக்கற மணி தான் சரி ..." என்று ஒரு குற்றப்புலனாய்வு துறையில் பல காலமாக புலப்படாத ஒரு வழக்கை முடித்தது போல பெருமூச்சிட்டாள் மெலிவா .

"இல்ல ...அது வந்து ...."என்று திரும்பவும் முதலில் இருந்து தொடங்கினார் ஆல்பர்ட்.

"போயி ஆக வேண்டிய வேலைய பாருங்க ....சும்மா காலங்காத்தால ...இந்த மனுஷனை விடியற்காலையில் எங்கேயும் அனுப்ப கூடாது ......." என்று எப்போதும் புலம்புவது போல, தன் அக்கறையை கொஞ்சம் இறைத்து சென்றால் மெலிவா.

"காலையில் சுமார் ஒரு 6 மன்னிக்கு வீட்டிலிருந்து காந்தி நகர் சென்றேன் அங்கே மழையின் காரணமாக பணம் தருபவர் வரவில்லை ... நீண்ட நேரம் கழித்து மழை நின்றவுடன் அங்கிருந்து காலனிக்கு வந்தேன் , அப்போது தான் மணி 8 : ௦௦ . பிறகு வின்சென்டை வழியில் சந்தித்தேன் ...அவனும் என்னை எட்டு மணிக்கு பார்த்ததாக சொன்னான் .. அதற்க்கு முன்னாடி ஒரு நாயைப் பார்த்தேன் ...அப்போ நேரம் கண்டிப்பாக பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் கடந்திருக்குமே...எப்படி .." என்று புலம்பி கொண்டே இருந்தார் ஆல்பர்ட்

" ஐம்பது வயது கடந்தாலே , தன்னை தானே பேசிக்கு கொள்வது , புலம்புவது என்று அனைத்துக் கோளாறும் தொடங்கினால்...அது ஒரு நோய் , அது என்ன நோய் தெரியமா உங்களுக்கு " என்று திரும்பவும் தன்னை நுழைத்து கொண்டால் மெலிவா

"அப்படியெல்லாம் எனக்கு ஒரு நோயும் கிடையாது ....." என்றார் ஆல்பர்ட் சற்று மங்கிப்போன குரலில்.
சற்று இடைவெளிக்கு பிறகு .

"ம் .........ஆமா அது என்னை நோயி..." என்றார் ஆல்பர்ட்

"பார்க்கின்சன்...அதாவது " நடக்கு வாதம் " என்று பெயர் " என்றாள் மெலிவா

"ஒருவேளை நமக்கு இப்படி ஒரு வியாதி இருக்குமோ .........."புலம்பிக்கொண்டே இருந்தார் ஆல்பர்ட்

இரவு 10 மணி .

"இங்க ஒருத்தன் நாள் பூரா புலம்பிட்டு இருக்கான் , ............அவ பாட்டுக்கு தூங்கறாளே " என்றார் ஆல்பர்ட், மெலிவாவைப் பார்த்து

மீண்டும் புலம்பல் துளிர்த்தது .

ஆல்பர்ட் வயது இருப்பது , ஒரு சிறிய குழாய்களை வைத்து கொண்டு , சில கூழாங்க் கற்கள் துணையுடன் அசுத்த நீரை தூய்மையாக்கும் ஒரு முறையை ஆராயும் முயற்சியில் இருந்தார் . அந்த நாள் முழுவதும் ஆராய்ச்சியில் தொய்வு இல்லாது உழைத்தார் .
இறுதியில் அவர் நினைத்தவாறு ஆராய்ச்சியில் வெற்றி கண்டார் .
திருப்பூர் சாயப்பட்டறை ஒன்றில் இருந்து இவர் ஆராய்ச்சிக்கு அழைப்பு வருகிறது .
இதை கேட்டவுடன் வெற்றிக்கொண்டாட்டத்தில் குதிக்கிறார் ...
.
" இச் சே கனவா ....." என்று திடுக்கிட்டு படுக்கையில் இருந்து எழுகிறார் ஆல்பர்ட் .
"அதுக்குள்ளே இவ்வளோ பெரிய கனவா ...என்று கடிகாரத்தை பார்க்கிறார் , திரும்பவும் ஒரு அதிர்ச்சி கடிகாரம் 10 :௦௦ ஐ காட்டியது .

இரவோடும் ,இதமான காற்றோடும் கைகோர்த்து வந்த தூக்கம் , திடீரென வந்த பூகம்பத்தால் உருக்கொலைந்து போனதை போல , நிலைகுலைந்து போனார் ஆல்பர்ட்.

எப்படி என்னக்கு மட்டும் நிமிடங்கள் மெதுவாக நகர்கிறது ....இல்லை இது ப்ரம்மையா ..ஒன்றும் புரியவில்லை .." என்று புலம்பிய படி உறங்க ஆரம்பித்தார் .

தொலைந்த தூக்கத்தை கண்கள் மூடியவாறு தேடத்தொடங்கினார் .

காலை 7.௦௦ மணி

கடிகாரத்தை பார்த்த படியே நேரத்தை கணித்துக்கொண்டு இருந்தார். விநாடிமுள்ளும் ,நிமிடமுள்ளும் சரியாக தான் இயங்குகிறதா என்று ஆராய்ச்சி செய்தார்.

"எல்லாம் சரியாய் தான் இருக்கு ...ஆனா என்னக்கு மட்டும் எப்படி நடக்குது ...."
ஒரு விஞ்ஞானியை போலவே தன்னை எண்ணிக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தார் .

மணி காலை 10 : ௦௦ காட்டி இருந்தது .

ஒரு வெற்று காகிதத்தில் தனக்கு நடந்ததை ஒரு ஐந்து பக்கம் எழுதிக்கொண்டிருந்தார் .

இப்பொது சற்று களைப்பில் , திடீரென திரும்பி கடிகாரத்தை பார்க்கிறார் , இப்போதும் அதே பத்து மணியை காட்டியது , ஓடி போய் பக்கத்துக்கு வீடுகளில் உள்ள கடிகாரத்தை பார்த்தார் எல்லாம் 10 :௦௦:20 , 10 :௦௦:30 , 10 :௦௦:40 என காட்டியது .
எல்லா கடிகாரமும் சரியாய் தானே காட்டுது , அப்போ எப்படி அதுக்குள்ள நான் அவ்வளவு எழுதியிருப்பேன்.

இறுகி இருக்கும் நிலத்தில் காய்ந்து போன ஒரு விதை துளிர்வது , காற்றை நம்பியும் இல்லை ,மழையை நம்பியும் இல்லை .....
அதே போல தான் ஆல்பர்ட் வாழ்க்கையும் எங்கே துளிர்விட போகிறோம் என்று தெரியாமல் நகர்கிறது . ஆனால் அதற்குள் இப்படி ஒரு சூறாவளி ...குழப்பமாய் சூழ்ந்து கொண்டது .

பொய்க்காத மழையை எதிர் கொள்ள தன் அக்கிளில் குடையை மடித்து கொண்டு பயணிக்க தொடங்கினார் , ஆல்பர்ட் , எப்படியும் இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் .

அப்போது " ஒளியின் வேகத்தில் பயணிப்பது கடினம் என்ற ஐன்ஸ்டீன் கூற்று E=mc2 ஐ , ஆராய்ச்சி செய்ய நாசா முடிவு செய்துள்ளது .." என்ற தொலைக்காட்சிப்பெட்டியில் காற்றில் கசிவது தெரியாது நடந்து கொண்டிருந்தார் இந்த ஆல்பர்ட் . ..............

எழுதியவர் : (3-Sep-17, 3:04 pm)
சேர்த்தது : sanmadhu
Tanglish : kaalththai venravan
பார்வை : 276

மேலே