வெளிச்சம் தேடும் உண்மைகள்

#வெளிச்சம் தேடும் உண்மைகள்..!

கனிம வளம் பெருகிக் கிடக்கிறதாம்
கண் உறுதியவர்களுக்கு
கடவுளாய் தமிழ்நாடு..!

கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்
பதவிக்கு மானம் விற்கும்
கையூட்டுக்காரர்களுக்கும்
கடவுளுக்கும் மேலாய் தமிழ்நாடு..!

கத்தி முனை அதிகாரங்களில்
சத்தமின்றி விவசாய நில அபகரிப்பில்
பூட்டி தாழிடப்பட்டுவிட்டது
பல உண்மைகள்..!

பத்து ரூபாய்க்கு
மூலிகை பெட்ரோல்
கண்டுபிடித்த இராமன் பிள்ளைக்கு
கல்தா..!

படுத்துவிடக்கூடுமாம்
ஆயில் நிறுவனங்கள்
கூடிப்பேசி குற்றமாக்கி
சிறைபிடிக்கப்பட்டது
ஏழைகளுக்கான
எரிபொருள் உண்மை..!

அடிமைகள் என்றும்
ஆட்டுவித்தபடி ஆடுவோம் என்றும்..
பதவிப்பிரமாணங்களின் போது
சாசனம் எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கலாம்
சீர்கெடும் தமிழ்நாட்டின் பின்
உண்மைகள் கைதாகியிருக்கக்கூடும்

எந்த சட்டத்தின் கீழ் என்று
எவரும் கேட்டு விடாதீர்கள்
உண்மை புதைபடுவது போல்
நீங்களும் புதையக்கூடும்..!

காய்ந்து கண்மறைவாகிவிட்ட
சரஸ்வதி நதியை தேடுகிறார்களாம்
150 கோடி செலவில்...
தமிழ்நாடு தேடி வரும்
நதிகளை முடக்கம் செய்யும்
அணைகளை உடைக்க வக்கற்றவர்கள்..

சரஸ்வதி கிடைக்காவிட்டாலும்
ஒருவருக்கும்
கவலை இருக்கப்போவதில்லை
இலட்சுமி நதி
தாராளமாய் பாயக்கூடும்
அவரவர் இல்லங்களில்
நதி தேடும் திட்டங்களில்..!

காதல் சின்னமாம் தாஜ்மகால்
கட்டுக்கதையும் காதில் பூச்சுற்றலும்
நேர்த்தியாக்கப்பட்டதில்
பொய் ஒன்று புகழ் பாடித்திரிகிறது..!

ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கின்
ஆட்சியில் விளைந்த
பிரம்மாண்ட சிவாலயத்தில்
பிணங்கள் படுத்திருக்கிறது
உலக அதிசயமாய்..!

தேஜோ மகால்
தாஜ்மகால் ஆன வரலாறு
ஆராய்ந்து ஆவணப்படுத்தப்படுத்திய
பேராசிரியர் பி.என். ஓக்
குற்றவாளியாம்..
சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைகள்
"தாலியம்" விடத்திற்கு
அவர் பலியான சரிதம் கூட
தாஜ்மகால் இரகசியங்களோடு
இருளில் இன்னமும்
உறவாடிக்கொண்டுதான் இருக்கிறது..!

தனிநாடு வேண்டி இலங்கையில்
சிறைப்பட்ட தமிழர்கள்
விடுதலைக்கு பின்
விடுதலை அடைகிறதாம்
போராளிகளின் உயிரும்..!

சிகிச்சை என்கிற பேரில்
இரசாயண ஊசிகள்
தின சாப்பாட்டில்
உயிர்கொல்லி பொருட்கள்...

போராளிகளின்
மரண பின்னணியில்
மனித போர்வை போர்த்தி
காய் நகர்த்தும் கொடுமைகள்
திரை மறைவினில்
பல உண்மைகள்
இன்னமும் உறைபனியாகவே.!


சுபாஷ் சந்திரபோஸ் முதல்
ஜெ ஜெ வரை
விடுவிக்கப்படாத மர்மங்கள்
மர்ம நாவல்களையும்
தோற்கடித்துவிடக்கூடும்..!

இருட்டடிப்பு செய்யப்பட
நியாயங்களும் உண்மைகளும்
இன்னமும் புழுக்கத்தில்
குமுறிக் கொண்டுதானிருக்கிறது..!

சிறைபிடிக்கப்பட்ட உண்மைகளுக்கு
விடுதலைதான் எப்பொழுது..?
வெளிச்சம் தேடும் உண்மைகளுக்கு
விடியல்தான் எப்போது..?

உண்மைகளை வெளிச்சத்திற்கு
கொண்டுவருகிறேன் என்று
கூக்குரல் எழுப்பிவிடாதீர்
குரல் வளைகள் நெரிக்கப்பட்டு
இருளுக்குள் மூழ்கடிக்கப்படுவீர்கள்..

மரணித்த உண்மைகளை
தேடி செல்லாதீர்
மரணம் உங்களைத் தேடிவரும்..!

இருட்டினில்
எண்ணிலடங்கா உண்மைகள்
வெளிச்சத்திற்கான ஏக்கத்தில்..!

உயிரின் மீது ஆசையில்லாதோரும்
வீரன் என்று தோள் தட்டுவோரும்
திரண்டு வாருங்கள்
புதைந்த பல உண்மைகளை
தோண்டி எடுப்பதற்கு
சில உண்மைகளாவது
வெளிச்சம் காணட்டும்..!

#சொ. சாந்தி

(02-09-2017 சனிக்கிழமை அன்று "அருந்தமிழ் கலை இலக்கிய மன்றம்" நிகழ்த்திய கவி அரங்கில் வாசித்த கவிதை. வழக்கறிஞர் திரு வேணுகோபால் அவர்களின் "நினைவில் நிற்பவர்கள் - பெரியார் - அண்ணா" என்கிற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு அனல் வீசியது. அற்புதம். "வெளிச்சம் தேடும் உண்மைகள்" என்கிற தலைப்பினை அளித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அளித்த திரு கனல்மணி சார் அவர்களுக்கும் திரு துருவன் சார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்)

எழுதியவர் : சொ.சாந்தி (3-Sep-17, 7:11 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 196

மேலே