சிதைக்கப்பட்ட கனவுகள்

சமூகநீதி எரிந்து சாம்பாலாகிக்கிடக்கிறது
சுடுகாட்டில்....

ஒரு எதிர்கால
மனநோய் மருத்துவச்சி
தொடுத்த கனவுமாலையை
பதவி வெறி பைத்தியங்களும்
பாசிச பைத்தியங்களும்
பிய்த்து எரிந்துவிட்டன...

ஒரு எதிர்கால
இதயநோய் மருத்துவச்சியின் கனவுகள் சுமந்த
இதயத்தை
இதயமே இல்லாத
அரக்கர்கள்
தீயில் கருக்கிவிட்டனர்....

ஒரு எதிர்கால
எலும்புநோய் மருத்துவச்சியின் கழுத்தெலும்புகளை
தூக்குக் கயிற்றில் இறுக்கி உடைத்துவிட்டன
முதுகெலும்பு இல்லாத
முட்டாள் கூட்டம்.....

ஒரு எதிர்கால
கண்நோய் மருத்துவச்சியின்
ஏக்கம் சுமந்த கண்களை
பிடுங்கி எறிந்துவிட்டன..
புழுத்துப்போன புறக்கண்களையும்
அழுகிப்போன அகக் கண்களையும் கொண்ட
குருட்டுக் கூட்டம்.....

ஒரு எதிர்கால
மகப்பேறு மருத்துவச்சியின் உடலை
கன்னியாக இருக்கும் பொழுதே காற்றில்
கரைத்துவிட்டனர்...
மலட்டு மனம்
கொண்டவர்கள்....

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (3-Sep-17, 9:50 pm)
பார்வை : 164

மேலே