குறுந்தொகை பாடல் 6 நெய்தல் - தலைவி கூற்று
நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
-பதுமனார்.
நள்ளென்றே -நன்றாக இருட்டிய
அவிந்து-முடிந்து
நனந்தலை -அகன்ற
மன்ற-உண்மையாக
முனிவு-வெறுப்பு
இரவும் நன்றாக இருட்டி உள்ளது .பேச்சு அரவம் இன்றி மக்களும் நன்றாக தூங்குகின்றனர் .வெறுப்பு இல்லாத இந்த உலகமும் நன்றாக தூங்குகிறது .நான் மட்டும் இப்படி தூக்கம் வராமல் வருந்துகிறேன்
நம்ம தலைவி காதலின் பிரிவால் தூக்கம் வராம கஷ்டபடுறாங்க .அதான் இப்படி புலம்பல்
தமிழ் விரும்பி புஸ்பநாதன்