தற்கொலையா கொலையா

தற்கொலையா? கொலையா?

கத்திமுனைகளெல்லாம் குறிமுனையை நோக்கி வீசப்படும் போது கத்தியை வீசும் கைகளை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன் சத்தமா? அசுத்தமா? என்று.

இரத்தக்கறை படிந்து அசுத்தமான கைகள் அத்தனையும்.

கூட வா, கைகோர்ப்போமென்ற குரல்களை நம்பி கூடச்சென்றால்
உன் கழுத்து சுருக்குமாட்டி டவரின் உச்சியில் தொங்கவிடலாம் யாரும் அறியா வண்ணம்.

கூட வா, மின் இரயில்வண்டியை மறிக்கலாமென்று கூறி கூட்டிச் சென்று பலியிடுவான் யாரும் அறியா வண்ணம்.

ஆதாரமில்லாமல் செய்யப்பட்ட, செய்யப்படும் அத்தனையும் அரசியல் கொலைகள்.
பலர் அறியாத மர்மங்கள்.

அரசியலுக்கும், மருத்துவத்துறைக்கும் என்ன தொடர்வு?
மருத்துவர்கள் என்ன மருந்து கொடுக்க வேண்டுமென்பதில் இருந்து, மக்கள் எந்த மருத்துவமனையை நாடவேண்டுமென்பது வரை அத்தனையும் சூழ்ச்சிகள்.

இயற்கை ரீதியிலான தமிழ் மருத்துவம் வளர்ந்தால் செயற்கை ரீதியிலான ஆங்கில மருத்துவம் வீழ்ச்சியுறும் என்ற பயத்தில் எண்ணற்ற தமிழ் மருத்துவக்குறிப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன அடியோடு.
அனுபவ ரீதியிலான வைத்தியர்களும் அடக்கப்பட்டார்கள் போலிகளென்ற அடையாளம் காட்டி.

சரி, சரி, தூக்கம் வர எல்லாரும் மாத்திரை போட்டுக்கோங்க...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Sep-17, 6:58 am)
பார்வை : 1740

மேலே