அலைபேசியின் ஒற்றை குறுஞ்செய்தி
![](https://eluthu.com/images/loading.gif)
அங்கும் இங்குமாய் வீடெங்கும்
சுற்றித்திரிகிறேன் !
கையில் அலைபேசியோடு !
அவனிடம் இருந்து ஒற்றை குறுஞ்செய்தி
வரும் என்று !
அலைபேசியின் ஒற்றை குறுஞ்செய்தி
ஒலி கேட்டதும் !
உள்ளத்தில் மட்டற்ற மகிழ்ச்சி
பரவி விடுகிறது ! நீதான் என்று !
அலைபேசி தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு
அப்படி ஓர் ஆசை என்னை ஏமாற்றி பார்ப்பதில் !
அவ்வப்போது கண்ணாடி முன் நின்று
சற்று பேசுவதும் ! என்னை அழகு படுத்திக்கொள்வதும்
உண்டு ! நேரில் பார்க்க வந்து விட்டால் என்ன செய்வது !
இந்த முறை கண்டிப்பாய் திட்ட கூடாது ! ஏன் எனக்கு
குறுஞ்செய்தி அனுப்புகிறாய் !
நீ ஒன்றும் எனக்கு தேவை இல்லை
உன்னிடம் நான் பேச தயாராக இல்லை என்று உறுதியாய்
சொல்லக்கூடாது !
அப்பா அழைக்கிறார் ! தோழி அழைக்கிறாள் ! ஏதோ ஏதோ
பேசுகிறேன் ! ஆனாலும் ஒவ்வரிடமும் பிதற்றுகிறேன் !
நான் நலம் தான் ! எனக்கு ஒன்றும் இல்லை !
என்று சொன்னாலும்
என்னுள் மாற்றம் வந்ததை கண்டுபிடித்து விடுவார்களோ
எனும் கவலை வேறு !
அவன் நிற்கும் இடம் ..வரும் இடம் போகும் இடம் ஒவ்வன்றுக்கும்
என் கால்கள் என்னை அறியாமல் கூட்டிச்செல்கிறது !
அவன் என் சோகம் அப்பிய முகம் பார்த்துவிட்டால் கண்டிப்பாய்
பேசிவிடுவான் எனும் நம்பிக்கையில் !
நாட்கள் நீள நீள ! இதயத்தின் வலி என்னவோ என்னை
கொன்று தின்றுவிடும் போல் இருக்கிறது !
எப்படி இந்த சித்ரவதை ! ஏன் இப்படி ! இவ்வாறெல்லாம்
என்னை நான் உணர்ந்ததே இல்லையே !
உணவு கசப்பாக இருக்கிறதே ! உறக்கம் என்பது என்ன ?
மறந்து விடும் போல் இருக்கிறது ! நான் நன்றாக உறங்கி
எத்தனை நாட்கள் ஆகிறது ! இவனை என்ன செய்யலாம் ?
பாவம் அவன் என்ன பாடு படுகிறானோ என்னிடம்
பேசமுடியாமல் !
இதோ என்னவன் மீது வைத்த உண்மை காதலில்
பாழாய் போன "ஈகோவை " தூக்கி எறிந்து விட்டு
இதோ ஒற்றை குறுஞ்செய்தி நானே அனுப்புகிறேன் !