அம்மா

அம்மாவுக்கு ஞாபக மறதி அதிகம்!
தன் பசி மறப்பாள்
தூக்கம் மறப்பாள்
துயரை மறப்பாள்
நோய் நொடி மறப்பாள் - தன்னை
நேசிக்க மறப்பாள்
சுவாசிக்க மறப்பாள்
சுற்றம் மறப்பாள்
சுகம் எல்லாம் தொலைப்பாள்
உலகை மறப்பாள்
உடலையும் மறப்பாள் - தானும் ஓர்
உயிரென்பதையே மறப்பாள்!
தான் ஈன்ற உயிர்
தன் அருகிலோ
தள்ளி தொலைவிலோ இருக்கும்போது!