தலைப்பில்லா கவிதைகள்

நிகழ்ச்சி நிரலில் இல்லாத
நிகழ்வொன்று
பார்வையாளர்களை பரவசப் படுத்தியது
நீ
புடவை கட்டி போயிருந்தாய்..!

*************************************************************

நீ
புள்ளி வைக்கிறாய்
பூமி வானம் ஆனது..
புள்ளிகள் நட்சத்திரங்களாயின...
நீ தேவதை ஆனாய்..!
***************************************************************

தேளின் கொடுக்கைப் போல கொட்டும் காலம்
நீ நீங்கினால்..
தேனின் குடுவை போல சொட்டும்
நீ நெருங்கினால்..
*****************************************************************

எண்ணி எண்ணி
வானில் தேடித் திரியும் நிலவு
நட்சத்திரங்களில் ஒன்று குறைவதாய்...
நீ பூமிக்கு வந்ததை அறியாமல்..!
*********************************************************************
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
எந்த கிளியிலும் இல்லையடி
எதிரில் உலவும் உன்னில் தான்
ஒளிந்து இருக்கிறது என் உயிர்...!
*******************************************************************

நீ சூடிப் போன பூக்கள் தவிர்த்து மற்றெல்லாம்
சூசைடு பண்ணிக்கொண்டதோ
வழியெங்கும் சிதறி கிடக்கும்
இறுதி பயண ஊர்வலத்தில்...
---------------------------------------------------------------------------------

உன்னைப் பெண்ணாய் படைத்து
எனக்கு இரு கண்கள் வைத்த
இறையவன் பெரியவனே.
----------------------------------------------------------------------------------

கூடைப் பூக்கள்
மீண்டும் கொடியில் மலர்ந்ததோ?
உன் ஒற்றைச் சடைப் பின்னலில்.
----------------------------------------------------------------------------------------

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (9-Sep-17, 7:45 pm)
பார்வை : 163

மேலே