கறுப்பி என் கறுப்பி அவள் ஒரு கருப்பு நிலா
இருள் சூடிய அந்த நீல வானத்தில்
வெள்ளையாய் எட்டிப் பார்க்கும் ஒரு நிலா
கருப்பு பர்தா மூடி மறைத்த முகத்தில்
கொஞ்சமாய் தெரியும் அவள் இரு கண்கள்
அவள் அங்கம் இன்று என்ன வண்ண ஆடை
அணிந்திருக்குமோ என நினைத்துக் கொள்கிறேன்
கருப்புக்குள் ஒளிந்த வண்ணங்களை தேடி
பின் அயர்ந்து போய் எதுவும் தெரியாமல்
அவள் வாசனையை மட்டும் குடித்துக் கொள்கிறேன்
அவள் நகங்களின் மேல் வண்ண சாயத்தைத் தேடுகிறேன்
அதுவாவது அவள் ஆடையின் வண்ணம் சொல்லிவிடாதா என்று
அவள் நகங்கள் வெகு அழகாய் அலங்கரிக்கப்பட்டிருக்க்கிறது
அப்படியே அழகு கிரீடமாய் சூடி இருந்தாள் மருதாணியை
அவள் கைகளையும் எவரும் பார்ப்பதை அவள்
விரும்பவில்லையோ என்னவோ எப்போதும் அவள் விரல்களை
ஒட்டிக் கொண்டிருக்கிறது அவளுடைய மருதாணி
அந்த ஆரஞ்சு வண்ண விரல்கள் என்னைக் கடந்து செல்லும் போது
அவள் அறியாமல் அந்த விரல் எப்போதும் என் தலை கோதி செல்கிறது
அவள் கொலுசுகள் அணிந்திருப்பாளோ என்னவோ தெரியவில்லை
அந்த சங்கீத சிணுங்கல்கள் கேட்காமலே சிணுங்கத் தொடங்குது மனசு
அவள் எங்கோ தூரமாக வருகையில்
கொஞ்சமாய் தெரியும் பாதங்களை கொஞ்சம்
அதிகமாக மறைத்து விடுகிறது அவள் காலணி
மீதியை அங்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் மருதாணி
மிச்சத்தை பார்த்துத் தீர்க்கிறது என் விழிகள்
கருப்பை முன்னை விட அதிகமாக வெறுக்க ஆரம்பித்தேன்
அவளை எனக்கு காட்டாமல் ஒளித்து வைத்துக்கொண்டு
எப்ப்போதும் அவளை மூடும் அந்த கருப்பு பர்தாவால்
அவள் விரல் நகங்களோடும்
அவள் விழி பார்வைகளோடும்
ஒரு வாழ்க்கை வாழ தொடங்குகிறேன்