மரணத்தின் கண்ணீர்

முட்காட்டில்
முல்லை பூத்தால்
அது கல்லறைதான்
செல்ல வேண்டுமா ??

வரண்ட வனத்தில்
சந்தனம் வளர்ந்தால் அது
விறகாக தீயில்தான்
வேகவேண்டுமா ??

காக்கும் அரசே
காவு வாங்கினால்
கேக்கும் மக்கள்
சாகத்தான் வேண்டுமா ??

பெண் அவள்
மருத்துவம் படித்திருந்தால்
கிராம மக்கள்
பலர் பிழைத்திருக்கலாம் ...!!

கன்னி அவள்
கனவு நிறைவேறிருந்தாள்
உலகம் அவள் சேவையை
கண்டு வியந்திருக்கலாம்...!!

ஏழ்மையின் வலி
அவளுக்கு தெரியும் என்பதால்
ஏழைகளுக்கு நல்வழி
பல பிறந்திருக்கலாம்....!!

பாவம் என் செய்வாள் அவள் ??!!
பாழ்பட்டுக்கொண்டிருக்கும்
பாரதத்தில் பிறந்துவிட்டாள் -அதுவும்
பாழாய்போன கிராமத்தில் பிறந்துவிட்டாள்

நகரத்தில் பயிலும் மாணவர்களுக்கு
வசதி என்றும் சொர்க்கம்
கிராமத்தில் பயிலும் மாணவர்களுக்கு
வசதி என்பது நரகம்

ஓவியவைக் காக்க பாடுபட்ட
பரந்த நல்மனம் கொண்ட
மக்கள் வெள்ளத்தில்
பூவை இவள் கஷ்டம் போக்க
அரசு எனும் பிக் பாஸ் இடம் இருந்து
தன் நியாயம் காக்க
எவருமின்றி மாய்த்துக்கொண்டாள்

ஏழை ஏழையாகவே
மடியவேண்டும் என்பதுதான்
நம் பாரத்தின் புதிய சட்டமோ ??
இது போல் சட்டங்களை காக்கும்
அரசியல் வியாதிகளை தேர்ந்து எடுத்த
ஒவ்வொரு தமிழனும்
மடிந்த நாள் ,மங்கை அவள்
தன்னை மாய்த்துக்கொண்ட நாள்

வெட்கத்துடன் தலைகுனிகிறேன்
பொக்கிஷம் அவளை தொலைத்துவிட்டு
வெதும்பி அழுகின்றேன்

என்றும்...என்றென்றும்
ஜீவன்

எழுதியவர் : ஜீவன்.. (10-Sep-17, 1:46 am)
Tanglish : maranthin kanneer
பார்வை : 126

மேலே