விதவை
விதவை
இருண்ட வானில் நிறம் சேர்க்க
ஒளிகண்ட திசைக்கு நேர் எதிராய்
வானில் பிறந்த வானவில்லாய் -மண்ணில்
பெண்ணாய் உருகொண்டு பிறந்தவளை..
வீசும் காற்றாய் விதிவந்து அடிக்க
கூடிப்பேசும் தலைவனை தனியாய் பிரிக்க
ஏசும் உலகிதோ கூடிச் சுழன்றிட..
வளர்பிறை காணாத வெண்ணிலவாய் -வாழ்வில்
தனிமையில் தேய்ந்திடும் பெண் நிலவை
வெள்ளை அடித்து வேறொரு திசையில்
விதவை இவளென ஒதுக்கும் உலகமே..
ஓர்நாள் விடியாமற் போகட்டும் உன்வானம் -அன்று
நிலவில்லா இருட்டேதான் தீர்மானம்
-மூர்த்தி