சாதீயில் கருகிய காதல்

உன் முகத்த பாத்துதானே பலவருசமாகி போச்சு

கண்ணு ரெண்டும் காச்சுப் போச்சு
காலம் ரொம்ப ஓடி போச்சு

தலையெல்லாம் வெளுத்துப் போச்சு

காத்திருந்து உடம்பு தானே அலுத்துப் போச்சு

பாவிமக மனசு இன்னும் அலுக்கலியே

இன்னிக்குதான் வருவியலோ..!?
நாளிக்குதான் வருவியலோ..!?
என்னிக்குனு சொல்லலியே..!?
ஏங்கிக் கெடக்கா பாவி மக..

குலசாமி கோவிலுக்கு கூட்டிகிட்டு போவியலோ

கோட்டிக்காரி நெத்திக்கு குங்குமம்தான் கொஞ்சம் தருவியலோ

சாதியின்னு சொல்லிக்கிட்டு பிரிச்சுபுட்டான் பயமக்கா

என் உசுரு உன்ன எரிச்சுபுட்டான் பயமக்கா

நீ போன இடம் கூடவர நானும்தானே எட்டு வச்சேன்

உன்ன நெனச்சு நெனச்சு காதலிக்க அழுகைய தான் கட்டி வச்சேன்

பாதி காலம் ஓடிப் போச்சு
மிச்சம் கொஞ்சம்., வந்திடுவேன் உன்கூட

இந்நேரம் எனக்காக சாதியில்லா ஊரு ஒன்னு பாத்து ஒரு, குடிச ஒன்னு கட்டிருப்ப

வந்ததுமே வாழ்ந்துக்கலாம்..கூரப்பொடவ மட்டும் கொண்டு வாரேன் மாத்திக்கிட..

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (12-Sep-17, 10:10 pm)
சேர்த்தது : சிவக்குமார்
பார்வை : 1040

மேலே