என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 30

பொழுது விடிந்தது....

எப்போதும் போலவே காலேஜ் போகவே பிடிக்காமல் படுக்கையை விட்டு எழுந்தாள் காயத்ரி.

மணி எட்டு....."காயத்ரி.....ரெடியா" என்றபடி விஜி காயத்ரியின் வீட்டுக்குள் வந்தாள்.

"ரெடி விஜி...ஆனா...." காயத்ரி முடிப்பதற்குள் "நீ என்ன சொல்ல போறேன்னு தெரியும், விடு, என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும், வா பேசாம" என்றாள் விஜி.

"கல்லூரிக்காக காத்திருந்த இருவரை தாண்டி ரோசெலினின் கார் சென்றது, ஆனால் நிற்கவே இல்லை,விஜிக்கோ சந்தோஷம், இனிமே டேவிட் தன் வழியில் வரமாட்டான் என்று, ஆனால்,நடக்கபோவதோ வேறு.

காலேஜ் வாசலில் காரினுள் காத்திருந்தான் டேவிட்.

விஜி உள்ளே செல்லும்போது மீண்டும் விஜியின் அருகில் சென்று பேசத்தொடங்கினான்.

"விஜி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும், ப்ளீஸ், நில்லு" என்றான் டேவிட்.

"ப்ளீஸ் நீங்க என்னை தொந்தரவு பண்ணீங்கன்னா நான் எங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டி இருக்கும், எனக்கு உங்ககூட பேச இஷ்டம் இல்ல" என்றாள் விஜி.

"விஜி, கண்டிப்பா நீ என்கிட்டே கொஞ்ச நேரம் பேசணும், ப்ளீஸ்" என்றான் டேவிட்.

"ஹலோ, அண்ணா, அவதான் புடிக்கலன்னு சொல்றா இல்ல, ப்ளீஸ் போங்கண்ணா, எல்லாரும் பாக்கறீங்க, அப்புறம் எங்களுக்கு தான் அண்ணா பிரச்சனை"என்றாள் காயத்ரி.

"இல்ல, இன்னிக்கு தான் லாஸ்ட், கண்டிப்பா நாளைல இருந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என்றான் டேவிட்.

"இல்ல அண்ணா. நீங்க........"காயத்ரி முடிப்பதற்குள் "காயத்ரி....ஒரு நிமிஷம்" என்றபடி "கண்டிப்பா நாளைலேந்து டிஸ்டர்ப் பண்ண மாட்டிங்க இல்ல" என்றாள் விஜி.

"இல்ல பண்ணமாட்டேன், கொஞ்சம் கார்ல உக்காரு" என்றான் டேவிட்.

"காயத்ரி, நீ போ, நான் வரேன்" என்றாள் விஜி.

"சரி டி, சீக்கிரம் வா, நான் போறேன்" என்றாள் காயத்ரி.

காருக்குள் அமர்ந்தாள் விஜி. டேவிட்டும் அமர்ந்தான். காரை சற்று தூரம் தள்ளி நிறுத்தினான்.

"விஜி, அன்னிக்கு நான் பேசினது தப்பு தான், மனசுக்கு புடிச்ச பொண்ணு, அதும் லவ் பண்ற பொண்ணு, லவ்வ அக்செப்ட் பண்ணலேன்னா ஒரு கோவம் வருமே, அதான் நேத்து வந்துச்சு, சாரி, நான் பேசினது தப்பு தான், இப்போ நான் என்ன பண்ணனும், நீ இல்லாத லைஃ ரொம்ப கஷ்டம்" என்றான் டேவிட்.

டேவிட்டின் இந்த மாற்றம் விஜியை ஆச்சரியப்படுத்தியது.

"டேவிட், ஒன்னு மட்டும் சொல்றேன், நேத்து நீ பேசினது ரொம்ப தப்பு, எப்படி உன்னால எந்த யோசனையும் இல்லாம என்னையும் ப்ரவீனயும் சேர்த்து பேச முடிஞ்சுது" என்றாள் விஜி.

"தப்பு தான், அவன் ரேஞ் எங்க உன் ரேஞ் எங்க, பேசினது தப்பு தான்" என்றான் டேவிட்.

"சி, இது ரேஞ் சம்மந்தப்பட்ட விஷயம் இல்ல, வாட்டவேர் ஹி இஸ், ஆனா அவனோட அப்ப்ரோச் அவனோட பிஹேவியர் எல்லாம் அவ்ளோ மெச்சூர்டான ஒரு பையனா காட்டுது. இன்னும் நீ புரிஞ்சுக்காம தான் பேசற" என்றாள் விஜி.

"இப்போ என்ன பண்ணனும் விஜி நான், நான் பேசினது தப்பு தான், உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன் இல்ல, வேற என்ன செய்யணும், கால் ல விழணுமா" என்றான் டேவிட்.

"நீ எதுக்கு இப்டி எக்ஸ்டரீமா போற" என்றாள் விஜி.

"உனக்காக என்ன வேண்ணாலும் செய்வேன் விஜி. உன்கிட்ட மன்னிப்பு கேக்றதுல என்ன இருக்கு, நீ அந்த கடலூர் பையன் கிட்ட ஒரு நல்ல பிரெண்டா இருக்க னு புரியுது, அதுக்காக என்னை ஏன் டிராப் பண்ற, நான் சின்சியரா லவ் பண்றேன் உன்ன, நேத்து நீ என்ன சொன்ன, நான் உன் வெள்ளை தோல் பாத்து லவ் பண்றேன் னு சொன்னியே, அது எவ்ளோ ஊண்டிங்கா இருந்துது. அதான் கோவத்துல நானும் கண்டமேனிக்கு பேசிட்டேன், சாரி, நான் தப்பு பண்ணிட்டேன், வேணும்னா என்னை அறைஞ்சுடு" என்றான் டேவிட்.

"ஹலோ, பேசினது தப்புன்னு உணர்ந்துட்டா போதும், கோவத்துல பண்ற தப்பு எல்லாத்துக்கும் தண்டனை குடுக்கணும்னா இந்த உலகத்துல எல்லாரும் தினமும் தண்டனை அனுபவிச்சுட்டே தான் இருக்கணும்" என்றாள் விஜி.

"விஜி, நீ புரிஞ்சுக்கோ, ப்ளீஸ், நான் உன்னை லவ் பண்றேன், " என்றான் டேவிட்.

"திரும்பி திரும்பி அந்த பாய்ண்ட்க்கு வராத டேவிட், ப்ளீஸ், எனக்கு இப்போதைக்கு இந்த லவ் அது இதுன்னு எந்த எண்ணமும் இல்ல, " என்றாள் விஜி.

"சரி விஜி, நான் காத்துட்டு இருப்பேன், எப்போ நீ புரிஞ்சுக்கறியோ அப்போ சொல்லு, அதுவரைக்கும் உன்னை நான் கஷ்டப்படுத்த மாட்டேன், ஆனா, உன்கிட்ட ஒரு ரெண்டு வார்த்தை டெயிலி பேசணும், அவ்ளோதான்" என்றான் டேவிட்.

"இனிமே டிஸ்டர்ப் பண்ண மாட்டன்னு தான் இப்போ பேச வந்தேன், ப்ளீஸ் என்னை இனிமே டிஸ்டர்ப் பண்ணாதே, " என்றாள் விஜி.

"விஜி....என்னை எப்படி நான் ப்ரூவ் பண்றது னு எனக்கு தெரில," என்றபடி காரில் சிகரெட் பற்ற வைக்கும் அந்த சாதனத்தை எடுத்து நேராக நெஞ்சில் சூடு வைத்துக்கொண்டான் டேவிட்.

"ஹலோ, என்ன இது இடியாடிகா பண்ற, " என்று அதை தட்டிவிட்டாள் விஜி.

"இல்ல விஜி, எனக்கு வேற எப்படி ப்ரூவ் பண்றதுன்னு தெரில" என்றான் டேவிட்.

"ஹலோ, பைத்தியக்காரத்தனமா பண்ணற நீ, லவ் ப்ரூவ் பண்ணி வர்றது இல்ல, இனிமே இப்டி எல்லாம் செஞ்சுட்டு வராத, இப்போ ரோஸெலின் கேட்டா இந்த காயம் எப்படி வந்ததுன்னு சொல்லுவீங்க, ப்ளீஸ், நான் கிளம்பறேன், இனிமே என்ன வழி ல வராதீங்க" என்றாள் விஜி.

"விஜி விஜி" என்று டேவிட் கூப்பிட கூப்பிட நிற்காமல் போய்விட்டாள் விஜி.

வகுப்பில்,

"ஏய் என்னடி, என்ன ஆச்சு, ஏன் ஒரு மாதிரி அப்செட்டா வர" என்றாள் காயத்ரி.

"இல்ல டி, இந்த பைத்தியக்காரன் என்ன பண்ணான் தெரியுமா?" என்றபடி காரில் நடந்ததை சொன்னாள் விஜி.

"என்ன டி, அப்டியா பண்ணான், விஜி, எனக்கென்னமோ அவன் சின்சியர் தான் னு தோணுது" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், வேலைய பாரு, உன் ஆளு வரப்போறான், ரெடியா இரு" என்றாள் விஜி.

"என்னடி நீயும் கிண்டல் பண்ற" என்றாள் க்யாதி.

"நீ மட்டும் டேவிட் சின்சியர் னு சொல்லலாமா" என்றாள் விஜி.

பேசிக்கொண்டிருக்கும்போதே செந்தில் வந்தான்.....

வரும்போதே கோவமாக,"விஜி அண்ட் காயத்ரி, ரெண்டு பேரும் போய் கம்ப்யுட்டர் லேப் ல வெய்ட் பண்ணுங்க" என்றான் செந்தில்.

வகுப்பில் அனைவரும் செந்திலை இப்படி ஒரு கோவத்தில் பார்த்ததே இல்லை, காயத்ரிக்கு விஜய்க்கும் பேயறைந்தாற்போல் இருந்தது.

காயத்ரி அழுதே விட்டாள்.

"சார், எதுக்கு சார்" என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு விஜி கேட்க,

"போங்க சொல்றேன்" என்றான் செந்தில்.

யோசித்தபடியே இருவரும் நடந்தனர்.

"என்னடி லேப் ல யாருமே இல்ல, இந்த அட்டெண்டர் கூட இல்ல, என்ன டி ஆகும், அவன் இப்டி கத்தி நான் பாத்ததே இல்ல டி, ரொம்ப பயமா இருக்கு டி விஜி" என்றாள் காயத்ரி.

"இரு டி, தைரியமா இரு, என்ன தான் பண்ணப்போறான் னு பாப்போம், என்ன ஆனாலும் அழாத, பயத்தை காட்டாத, தைரியமா இரு" என்றாள் விஜி.

பத்து நிமிடம் காத்திருந்தனர், பிறகு தான் வந்தான் செந்தில்.

நேராக காயத்ரியின் மிக அருகில் வந்து, "என்ன திமிரு உனக்கு" என்றான் செந்தில்.

நடுங்கி போனாள் காயத்ரி.

"ஏ....ஏன் சார், என்ன ஆச்சு" என்றாள் காயத்ரி.

"நேத்து பெரிய இவை மாதிரி பேசின, இனிமே உன்னை என்ன பண்றேன் பாரு, நீ ஒவ்வொரு நாளில் என்ன அவஸ்தை படபோறன்னு" என்றான் செந்தில்.

"சார், நாங்க என்ன சார் பண்ணுவோம், நீங்க தான் எங்களை தேவை இல்லாம வம்புக்கு இழுக்கறீங்க" என்றாள் விஜி.

"விஜி அதிகம் பேசின, உன்னை என்ன பண்ணுவேன் னு தெரியாது" என்றான் செந்தில்.

"என்ன, நீ அழகா இருக்க னு சொன்னா புடிக்காதா உனக்கு, " அதட்டல் குரலில் பேசினான் செந்தில்.

"சார், ப்ளீஸ் நாங்க போறோம்" என்றாள் காயத்ரி.ஆண்கள் கலங்கி விட்டன அவளுக்கு.

"உன்னோட செல் எங்க" என்றான் செந்தில்.

"எதுக்கு சார், அது ஏன் பெர்சனல்" என்றாள் காயத்ரி.

"ஓஹோ, நீ எனக்கு ஆரம்பத்துல அனுப்பின மெசேஜ் எல்லாம் என்கிட்டே இருக்கு, எல்லார்கிட்டயும் காட்றேன், அப்போ தெரியும் உன் பர்சனல் எல்லாம், நீங்க ஸ்மார்ட்டா இருக்கீங்க, இன்னிக்கு நீங்க பிளாக் ஷர்ட்ல நல்லா இருந்தீங்க....எல்லா மெசேஜும் காட்றேன்" என்றான் செந்தில்.

"என்ன சார் மெரட்டுறீங்க, நீங்க அனுப்பின மெசேஜ் எல்லாமும் நாங்க காட்டுவோம்." என்றாள் விஜி.

"காட்டுங்க, அதான எனக்கும் வேணும். அதுவே போதும், நாங்க ரொம்ப க்ளோஸ் னு காட்ட"என்றான் செந்தில்.

"சார், எதுக்கு சார் எங்களை இப்டி டார்ச்சர் பண்றீங்க, நாங்க என்ன தான் பண்ணனும்" என்றாள் காயத்ரி,

"நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும்" என்றான் செந்தில்.

காயத்ரி அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனாள், கண்கள் பொல பொலவென நீரை கொட்டியது.

"சார், என்ன சார் பேசறீங்க, கொஞ்சம் நாகரீகமா பேசுங்க" என்றாள் விஜி.

"நான் நாகரிகமா கல்யாணம் தான் பண்ணிக்க சொன்னேன், கூட வந்து படுக்கவா சொன்னேன்" என்றான் செந்தில்.

"சார், கொஞ்சம் இங்கிதமா பேசுங்க, என்ன வார்த்தை சார் பேசறீங்க" என்றாள் விஜி.

"விஜி, நான் உன்கிட்ட பேசல, காயத்ரி, உனக்கு ஒரு நாள் டைம், நாளைக்கு வந்து முடிவு சொல்லு" என்றான் செந்தில்.

காயத்ரியின் பதிலுக்கு காத்திருக்கவே இல்லை, சென்றுவிட்டான் செந்தில்.

நடைப்பிணமாக வெளியே வந்தாள் காயத்ரி.மதியமே காய்ச்சல், வாந்தி மயக்கம் என்ன உடல்நிலை சரிந்தது காயத்ரிக்கு.

வகுப்பை தொடரமுடியாமல் காயத்ரி அரைநாள் விடுப்பு கேட்க, அவளை வீட்டில் கொண்டுவந்து சேர்க்க விஜியும் விடுப்பு எடுத்தாள்.

பேருந்துக்காக காத்திருந்தபோது மதினா பேருந்து வரவே, அதில் ஏறினர் இருவரும்.காயத்ரியின் அழுத கண்கள் சிவந்து இருந்தன.காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருந்தது.

"விஜி, நான் செத்து போய்டறேன் டி, அப்போதான் எனக்கு நிம்மதி" என்று அழுதாள் காயத்ரி.

"ஏய்,பஸ் ல எல்லாரும் பாக்கறீங்க, இப்டி அழாத, விடு, இதை பத்தி யோசிக்காத, இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு சாகறேன் னு பேசற" என்றாள் விஜி.

"இல்ல டி, அப்பா என்மேல வெச்சிருந்த நம்பிக்கை எல்லாம் பாழாய் போய்டும், அப்பாவை கஷ்டப்படுத்த விரும்பல டி" என்றாள் காயத்ரி.

"ஏய், நீ என்ன டி உன் அப்பாவை கஷ்டப்படுத்த போற, எல்லாம் சரி ஆய்டும், நீ அழாம பேசாம வா" என்றாள் விஜி.

"என்ன மேடம், உங்க பிரென்ட் கு உடம்பு சரி இல்லையா" என்றான் கண்டக்டர்.

அப்போது தான் தெரிந்தது, ரியாஸின் பேருந்தில் பயணிக்கிறோம் என்று.

"ஆமாம், ஜுரம் அடிக்குது, புட் பாய்சன் பொல" சமாளித்தாள் விஜி.

"இல்லையே, பாத்தா ரொம்ப நேரம் அழுதாப்ல இருக்கு, மூக்கு கண்ணு எல்லாம் செவந்து இருக்கு" என்றான் கண்டக்டர்.

"இல்ல அண்ணா, அப்டி எல்லாம் இல்ல" என்றாள் விஜி.

"சரி, தங்கச்சி, உடம்ப பாத்துக்கோ.......வளவனூர் வளவனூர் எல்லாம் எறங்குங்க........கோலியனூர், விழுப்புரம், கோலியனூர், விழுப்புரம் ஏறு ஏறு ஏறு" என்றான் கண்டக்டர்.

"வரேன் அண்ணா" என்றாள் விஜி.

"சரி மா, பாத்து போங்க" என்று கூறிவிட்டு "போலாம் ரெய்ட் ரெய்ட்" என்றான் கண்டக்டர்.

காயத்ரியின் வீடு பூட்டி இருந்தது.

பக்கத்து வீட்டு அம்சவேணி வந்து காயத்ரியிடம்,"காயத்ரி, அப்பாவும் அம்மாவும் பாட்டியும் யாரோ பெங்களூர்ல உங்க சொந்தக்காரங்களுக்கு சீரியஸா இருக்குன்னு கெளம்பி போய்ட்டாங்க, தம்பியும் நீங்களும் விஜி வீட்ல இருக்கனும் னு சொல்லிட்டு போனாங்க, இல்லன்னா, நான் செல்வியை அனுப்பறேன் துணைக்கு, உங்க வீட்ல படுத்துகோங்க, ப்ரிஜ்ல இட்லி மாவு இருக்காம், இட்லி இல்ல தோசை ஊத்தி சாப்பிட சொன்னாங்க, துணி மாடி ல காயுதாம் அதை எடுத்து மடிச்சு வெப்பியாம்" என்றாள்.

"அக்கா, அவளுக்கு கொஞ்சம் ஜுரம் அடிக்குது, சரி, நான் எல்லா துணியையும் மடிச்சு வெக்கறேன், நைட் எங்க வீட்ல படுத்துக்குவா" எண்டால் விஜி.

"காயத்ரி, நீ டிரஸ் சங்கே பண்ணிக்கோ, நான் மாடிக்கு போய் துணிமணி எடுத்துட்டு வரேன்.நைட் ரொம்ப அதிகமா ஜுரம் அடிச்சா டாக்டர் கிட்ட போலாம்" என்றாள் விஜி.

சற்று நேரத்தில் துணி எல்லாம் மடித்து வைத்துவிட்டு வீட்டை பூட்டி அம்சவேணியிடம் கொடுத்து," அக்கா, காயத்ரி தம்பி வந்தா, தேவையான டிரஸ் எல்லாம் எடுத்துட்டு எங்க வீட்டுக்கு வர சொல்லுங்க, பூட்டி சாவிய அவன்கிட்ட குடுத்து அனுப்புங்க" என்றபடி விஜி காயத்ரியை கூட்டிக்கொண்டு மெதுவாக அவள் வீட்டுக்கு சென்றாள்.

பகுதி 30 முடிந்தது.

-----------தொடரும்----------------

எழுதியவர் : ஜெயராமன் (11-Sep-17, 8:28 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 281

மேலே