அப்பா

தந்தையர் தினத்திற்கு
அப்பாவிற்கு என்ன தரலாம்
கைக்கடிகாரம் கூட சுமையாக
தெரிந்த உன் கைகளுக்கு
பேரப்பிள்ளைகளை தூக்கிச் சுமப்பது
மட்டுமே சுகமாக இருந்தது
புத்தகம் ?படிக்காத புத்தகங்கள் ஏதும் இல்லை
பணமோ பகட்டோ பதவியோ
என்றுமே பிடித்ததில்லை
பாட்டு ?
நீ கேட்காத பாடாத பாடலில்லை
பல்கலைக்கழகத்தில் ஒலித்த கம்பீரக் குரல்
தொண்டைக்குள்ளேயே சுருண்டு கொள்ளும் போது
தோல் சுருங்கி ..எடை குறைந்து
குரல் இழந்து நீ துயருறும் போது
அப்பா
என் ஆரோக்கியத்தின் பாதியையும்
என் ஆயுளின் பாதியையும் உனக்கு த் தருகிறேன்,
என் வாழ்வு முடியும் வரை நீயும் இரு .
by
A ,P ,Sathya Swaroop