என்னைப் பிரியாது

நேரிசை வெண்பாக்கள்

காலைப் பகலவனும் காணும் நிலவொளியும்
மாலை மலரழகும் மாறியதே - வாலையே
நின்றதெலாம் மாறும் ! நிலையாக நீமட்டும்
என்னைப் பிரியா திரு !

பச்சையுடல் மாறியதே பால்மணமும் மாறியதே
உச்சிமுடி மாறி உயர்ந்ததுவே - கச்சனிந்த
மின்னே உலகெலாம் மீண்டுமீண்டு மாறினும்நீ
என்னைப் பிரியா திரு !!

காலங்கள் மாறுதுவே காயங்கள் மாறுதுவே
ஜாலங்கள் கோடி சலிக்கிறதே - கோலமிது
என்றைக்கும் மாறுவதே ! என்றாலும் நீமட்டும்
என்னைப் பிரியா திரு !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (13-Sep-17, 8:17 pm)
பார்வை : 83

மேலே