சூழ்வினையாய் வந்த சூர்ப்பனகை

சூழ்வினையாய் வந்த சூர்ப்பனகை

இராமயணக் காதையின் பாத்திரம் சூர்ப்பனகை .
பாராளும் மன்னனுக்கும் பதிகின்ற பாத்திரம் .
இராவணனின் சகோதரி இராமகாதையின் உரு .
அரக்கர் குலத்திலே தோன்றிய அன்னையிவள் !


கும்பகர்ணன் , விபீடணன் முதலானோர் சோதரி .
ஊழ்வினையால் காட்டினிலே இருந்த இராமனிடம்
சூழ்வினையால் தன் மனத்தைப் பறிகொடுத்தாள் .
பாழ்மனமோ மாற்றமின்றிப் பரிதவித்தாள் நங்கையுமே !

தண்டகாரண்யம் காட்டினிலே இராமபிரான் தம்பியாம்
இலக்குவணன் சினங்கொண்டு சூர்ப்பனகை மூக்கினையும்
வெட்டிவிட்டுத் துரத்தினானே அந்தோ பாவம் .
அண்ணனினை நாடியவளோ முறையிட்டாள் இராவணனிடம் .

கோபங்கொண்ட இராவணன் சீதையினை சிறையிட்டு
அசோகவனத்தினிலே அரக்கியர்கள் புடைசூழ அடைத்து வைத்தான் .
கடும்போர் உருவாக இலங்காபுரி அழிய
தருமம் நிலைபெற சூற்பனகையே காரணகர்த்தா ஆனாள் !

சூர்ப்பனகை அழகிலே தாய் கைகேசி , பாட்டி தாடகை
விஞ்சியே நின்றவள் . காந்தமென ஈர்க்கும் கண்கள்
மதுரையின் மீனாட்சியின் கண்களை ஒத்தவள் !
கம்பரின் காதையிலே அரக்கியாக விளங்குபவள் !!

ராட்சசியின் உருவினள் . அழகில் குறைந்தவளாய்
இராமனின் முன் நிற்க சினம் கொண்ட பிரானோ
அங்கத்தை வெட்டிட சொல்ல சினங்கொண்ட நங்கையோ
சீதைதனைக் கொல்லச் சொல்ல இராமாயணம் உருபெற்றது .

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்


  • எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன்
  • நாள் : 13-Sep-17, 11:04 pm
  • சேர்த்தது : sarabass
  • பார்வை : 55
Close (X)

0 (0)
  

மேலே