சொல் வனம்

சொல்லாமல் ஒரு நாளும்
சொல்லி விட்டு மறு நாளும்
சொல் வனத்திற்குள் புகுந்தேன்.

முன்னோர் சொல்லியவை
பெரும் மரங்களாய் இருக்க
பின்னோர் சொல்லாதவை
கண்ணுக்குத் தெரியாத
காற்றாய் சிலிர்க்க

எண்ணத்தில் வந்ததெல்லாம்
ஏக்கங்களும் எதிர்பார்ர்ப்புகளும்
வண்ணக் கவிதையாய்
வலம் வரும் வனத்தில்

பொருள் தெரியா
வாழ்க்கை எனுஞ் சொல்லுக்குப்
பொருளறிய எத்தனித்தேன்

கருப்பு மையினால்
களிம்பேறிய காட்டினில்
விருப்பம் எனது
என்னவென்று அறியாது

முடங்கி கிடந்தன
மூட்டு வலியினால்
கிடங்கு போன்ற
நிகண்டு நூலில்.

கணக்கற்றுப் பூத்துக்
கிடந்தன மொழிகள்
பிணக்குகள் நிறைந்த
கடாவிடை உலகிதில்

இதிலே எங்கிருந்து
நான் என்னத்தை
சொல்ல?

எழுதியவர் : thaa. jo. ஜூலியஸ் (14-Sep-17, 11:30 am)
சேர்த்தது : T. Joseph Julius
Tanglish : soll vanam
பார்வை : 65

மேலே