பள்ளிக்கூட ஈர்ப்பு

சந்திரனும் சூரியனும்
கோடிட்ட இவளின்
தலையை இரண்டாக
பிரிக்க!
அதை
என் மனக்கொடியில்
பூர்த்த மல்லிகை பூக்கள்
கோர்க்கின்ற வேளையில்,

சின்ன நதி ஒன்று
இவளின்
புருவம் என்ற பெயரில்
பூவேளியாக காட்சியளிக்க,

இவள் தொட்டு வைத்த
பொட்டு ஒன்று
தொடர்ந்து என் சிந்தனையை
சிதறடிக்கின்ற வேளையில்,

சொல்லி அனுப்பும்
என் வார்த்தைகள்
இவளின் செவிகளில்
செல்லாமல் திரும்பி வரும் வேளையில்,

இமை என்னும்
ஏடுகளில் யார் எழுதி வைத்தது?!
கதைகளை!!,

கதைகளை
காணும் போதே
கடத்தி செல்லும்
என் எண்ணங்களை
ஏடுகள் வைத்து
முடிக்க முடியாமல்
தவிக்கும் வேளையில்,

முக்குளித்து எடுத்து வரும்
முத்துக்கள் எல்லாம்
இவளிடம் மூக்குத்தியாக
குடியேர,
கண்ணத்தில்
முந்தி வந்த
ஒரு "பரு"
இவளின்
முதல் பார்வை
காட்டாத இவளின் பருவ அழகினை
காட்டுகின்ற வேளையில்,

பிரியாத இவளின் இதழ்கள்
புரியாமல் எதையோ பேச
புலம்பி தவிக்கும்
என் வார்த்தைகள்
யாருடனும் சென்று
அதன் விளக்கத்தை
கேக்க முடியாமல்
துடிக்கும் வேளையில்,

அழகிய மணியையும்
ஆபரணங்களையும்
அங்கமாக அணிந்த
இவள் கழுத்தில் கண்டு
என் தலைக்கணம்
கறைந்து போன வேளையில்,


உடலை ஒட்டிய
கவிதை என்ற
இவளின் கைகள்
என்னை மொத்தமாக கட்டிப்போட!
அதை கலைந்து எடுத்த விரல்கள்
என்னை கவிஞன் என்று
காட்டுகின்ற வேளையில்,

முல்லை மலரென
மொட்டு விட்டு
தொட்டு பரிக்க ஏங்கும்
இவளின் முன் அழகும்!
அதனை
மூடி வைத்து மறைக்கும்
பின் அழகும்!!
முன்னும் பின்னும்
பிம்பமாக பிரதிபலிக்கும்
வேளையில்,

பார்வைக்கும்
பாதத்திற்க்கும்
இடையில் இடையை
படைத்த இறைவன்
அதற்க்கு இடையில் எதற்க்கு
என்னை படைத்தான்?!
இன்பம் என்று வாழவா?!
இல்லை
இன்னல் பட்டு சாகவா?! என
தெரியாமல் இன்னும்
குழம்பும் வேளையில்,

சமயம் பார்த்து
இதழ் பிரியும்
கமல மலரை தாங்கி நிற்கும்
தண்டாக இவளின் கால்கள்
மெல்லிய உடலை மெதுவாக
தாங்கி நிற்பதை கண்டு
நான் உருகி தவிக்கும் வேளையில்,

கொஞ்சும் சிணுங்குகின்ற
கொலுசுகள்
முழுமையாக என்னை
சிறை செய்து வைக்க!
பார்க்கின்ற என் விழிகள்
ஏனோ இவளின் பாதங்களில்
தோற்றுப்போக,

தோற்கின்ற என்னை
ஏற்பாளோ? என
எண்ணி செல்லும்
எனக்கு ஏன் இந்நிலை!

பள்ளி ஆடையில்
வந்தவள் என்னை
பருவ ஒடையில் தள்ள!
இதயத்தை கேட்டு
சென்றவன் இவளிடத்தில்
ஈர்க்கப்பட்டு நின்றேனே!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Sep-17, 7:30 pm)
Tanglish : pallikkooda eerppu
பார்வை : 234

சிறந்த கவிதைகள்

மேலே