கற்பு ஒரு பொருட்டில்லை

பெண்களுக்கு கற்பு
ஒரு பொருட்டில்லை ....

ஆடைக்குள்
ஆபாசத்தை சுமந்து
அடைக்கோழிகளாய்
இருப்பதை காட்டிலும்
இது ஒன்றும் அவ்வளவு
பெரிய தவறில்லை ...

சாதிக்க பிறந்தவளை
சாமானியாய் வைத்து
இல்லத்தரசியாக்கியதாக
பெருமை பேசுகிற
ஆண் குடும்ப சிந்தனை
புகளுக்குரியதல்ல
புளுங்களுக்குரியது ...

பெண்ணுறுப்பு ரணப்படும்
தருணங்களில்...
இந்த சமுதாயம்
அவளிடம் கற்பை
கண்கொத்திப்பாம்பாய்
கவனிக்கிறது ...
பூப்பாய் ...
தாயாய் ...
வலியை சுமந்தபோதெல்லாம்
இந்த சமுதாயம்
கொண்டாட்டம் போட்டு
அந்தரங்க வேதனையை
ஆபாச படுத்தியதே
தவிர
ஆறுதல் மருந்துகளை
அள்ளித்தர மறந்துவிட்டது

கலாச்சார சடங்குகளுக்குள்
பெண்ணை
திணித்ததே தவிர
அவளின்
புறக்கணிப்பு மனுக்களை
ஏற்க மறந்தே போனது...

அப்பன் உட்பட
அனைவரும்
குற்றவாளிகள்தான்
இந்த ஆணாதிக்க
சமுதாயத்தில் ...

அடக்க ஆடைக்குள்
கற்பை பத்திரப்படுத்திவிட
முயன்றதே தவிர
முடியுமா
என்பதை மறைந்துபோனது ...

விபச்சார வருமானங்களை
வைத்து படிப்பு கற்றுக்கொண்ட
குழந்தைகளை கொண்ட
சமுதாயத்தின் முன்
ஆண்மை என்பது
அட்டூழியமாகவே
கருதப்படுகிறது ...

பெண்களில் இரண்டே
முறைதான்
விருப்பப்பட்டோ
அல்லது
விருப்பப்படாமலோ
மொத்தத்தில்
பலாத்காரமாக்கப்படுவது...

வெறியர்களின் வேட்கைக்கு
இரையானவளை ...
கற்பு கேலி செய்து
காயப்படுத்துகிற
இந்த சமுதாயம்
முன் ...
கண்டிப்பாக கற்பு
ஒரு பொருட்டல்ல
பெண்களுக்கு ....

எழுதியவர் : (17-Sep-17, 11:34 am)
பார்வை : 152

மேலே