துளி விஷம்

(ஆசிரியப்பா)
ஆயிரத் துத்தொள் ஆயிரத் தருபத்
ஐந்தாம் ஆண்டிலே இளங்கலை பயின்ற
பொழுது பொழுது போக்காய் கழகப்
பொதுக்கூட் டங்கள் செல்வோம் நாங்கள்
பொழுது போவதெ மக்குத் தெரியா
அந்தணன் பாலுவும் அனைவரம் போவோம்
அந்தப் பெரியார் இராமசா மிநாயகர்
அந்தண ரைப்புரட் டிடுவார் அந்தபாலு
அந்தணன் என்பதை மறந்தும் சிரிப்பன்
அந்தணன் அவனுக் கரசுவே லையில்லை
அந்தணன் மாறவில்லை புரட்சியாய்
விஷத்தை விஷமெனத் தெரியாச் சிரித்தான்
சிரிப்புக் கோமா ளிப்பேச் சாலே
சீரழிந் தார்கோ மானும் சீமானும்
ஈரஇரக் கமில்லாத் தமிழர் நாமும்
படித்ததுமே சேர்ந்தான் பட்டா ளத்தில்
நாலாண் டில்கால் போனது
எத்தனை பாலுக் களிப்படிப் போனதோ!

எழுதியவர் : பழனிராஜன் (17-Sep-17, 8:57 pm)
பார்வை : 261

மேலே