காற்றுக்கு வேலியில்லை
காற்றுக்கு வேலியில்லை
ஏற்றமுடன் சிந்தனைகள்
எம்மருங்கும் இருந்தாலே
சாற்றிடுவோம் வெற்றிகளை
சந்ததியும் வாழ்த்திடவே .
ஊற்றாக மாறுகின்ற
உறுதுணையும் கிட்டினாலே
காற்றுக்கு வேலியில்லை .
கண்டிடலாம் காசினியில் !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்