மரணமே காதல் பரிசாய்

என் கனாவில் கலந்து
வினாவென எழுந்தாய் நேற்று...
என்னை சக்கரை போல் கரைத்து
வீசி எறிந்தாய் இன்று.....
சிவப்பு கம்பளம் விரித்தேன்
அன்பே உனக்கு......
சிவந்த கண்களுடன் மடிக்கிறேன்,,,
நீ சிவக்க சிவக்க கொடுத்த
முத்தங்களை மறக்கிறேன்.....
தெறித்து சென்ற சாரலாய்,,
வளைந்து போன நாணலாய்,,
ஆற்றங்கரை பாறைகளை
வெறுக்கிறேன் !!!!
உன் சத்தம் ஊன்றி
இச்சை தொட்டு,
மெட்டுக்கட்டி மெருகேற்றிய
மெழுகு உருகுவது,,
காதலின் தோல்வியல்ல....
எனது தோல்வியே!!!!!
வைக்கோல் பற்றி எரியும் தீயாய்,,,
உன் காதல் என்னுள் சுடும்
வேள்வியாய்.!!!அத்தனை பார்வைக்கும் உன்
இரட்டை கண்கள் பதில்
சொல்லுமாயின்.,,,,
என் ஒற்றைக் காதலுக்கு என்
மரணம் பத்தி அமைக்கும்!
கதையாய்... கட்டுரையாய்...
கவிதையாய்...

எழுதியவர் : காவியா பாரதி (20-Sep-17, 8:42 am)
பார்வை : 356

மேலே