காதலிக்கத் தெரியுமா
நான் ஒரு கவிதை
என்னை உன்னால்
பாடத் தெரியுமா
நான் ஒரு ஓவியம்
என்னை உன்னால்
தீட்டத் தெரியுமா
நான் ஒரு சிற்பம்
என்னை உன்னால்
வடிக்கத் தெரியமா
நான் ஒரு காவியம்
என்னை உன்னால்
எழுதத் தெரியுமா
நான் ஒரு இலக்கணம்
என்னை உன்னால்
உச்சரிக்கத் தெரியுமா
நான் ஒரு இதயம்
என்னை உன்னால்
உணரத் தெரியுமா
நானும் ஒரு பெண்தான்
என்னை உன்னால்
காதலிக்கத் தெரியுமா