பிராணன்
(ஆசிரியப்பா)
நாடிட நோயினை நாடிடு நாடியை
மூலர் வாகடம் மூலமாய்ப் பார்த்திடு
மூன்று நாடியே முக்கிய மென்றார்
நன்றது வாதம் பித்தம் சிலேத்மம்
நாடிமூன் றும்பத மாயின் சுகமே
நாடி மூன்றும் விகிதம் பாடிட
நாடிப் பிராணன் உடலில் ஆடிடும்
நாடி மூன்றும் சரியென
நாடா தோடும் நமைவிடுத் துநோயே
--- ராஜ பழம் நீ (21-sep-2017)