நிலா - அவள் - நட்சத்திரம்

பரந்த வானில்
ஒற்றை நிலவு,
அதனைச் சுற்றி
சிதறிவிட்ட முத்துக்களாய்
நட்சத்திரங்கள்.....
குளிர்ந்த நிலவொளியில்
என்னவள் அருகில் இருக்க
அவளின் வட்ட முகத்தை
என் கைகளில் ஏந்தி
அவள் பிறை நெற்றியில்
என் இதழ்கள் பதிக்க,
நட்சத்திரங்கள் எல்லாம்
வாழ்த்தொலி
முழங்குகின்றது
"மழை துளியாய்"......