தமிழ் துரோகியே மரணித்திடு

தமிழ் துரோகியே மரணித்திடு !
“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு”
“வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்”
“தமிழனென்று சொல்லடா!!!
தலை நிமிர்ந்து நில்லடா”
என
வீர வசனம் பேசிக் கொண்டே
சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைக்கும்
நயவஞ்சகக் கூட்டத்தின் போலி வேஷத்தைக் கிழித்தெறிந்து
அப்பாவி மக்களின் முன்னிலையில் திரை போட்டுக் காட்டுவோம்.
அப்பாவி தமிழர்களின் அப்பாவி தனத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு
தமிழ் உணர்வின்பால் தாண்டவமாடும் தமிழ்த் துரோகிகளின்
குறுட்டுத் தைரியத்தை
முளையிலேயே
கிள்ளுவோம்.
“தமிழ் எங்கள் மூச்சு”
“நாம் தமிழை வளர்போம்”
“நாம்தான் தமிழை வளர்க்க வேண்டும்”
“தமிழனாய் பிறந்து என்னத்தைச் சாதித்ததோம்”
“நம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்”
என்று மேடை தோறும் உணர்ச்சிப் பொங்க வசனம் பேசிய தமிழ் வேடதாரிகள்
கடலென பரந்துகிடக்கும் தமிழர்களின் கரவோசை ஓய்ந்து
வீடு திரும்பியவுடன் குடும்பத்தாருடன்
கொஞ்சிப் பேசுவது ‘தஸ் புஸ்’
ஆங்கிலத்தில்.
“ஊருக்குத்தான் வீர உபதேசம்
வீட்டுக்குள்ளே ஆங்கில மோகத்தில் உல்லாசம்”
‘தமிழ்! தமிழ்! தமிழ்! என உரக்கக் கூவி
தமிழையே கூறுபோடும் கூட்டம் ஒரு புறம்’
‘மேலைநாட்டு மோகத்தில் மூழ்கித் தமிழ்ப் பண்பாட்டைப்
புதைகுழியில் புகுத்தி இன்பங்காணும் கூட்டம் இன்னொருபுறம்’
‘பணத்தாசை பேராசையாகி இறைவாசல்தோறும்
இறைவனையே விலைபேசும் ஆன்மீகவாதிகள் வேறொருபுறம்’
தமிழ் அழியுது பாரடா – நம்
செந்தமிழ் அழியுது பாராடா !!!
மூவேந்தர் கட்டிக்காத்த தமிழடா – இன்று
முச்சந்தியில் நிற்குதே ஏனடா????
“நம் தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏனிந்த அவலம்???”
தமிழ் வளர்ந்த முறை சரியில்லையா?
தமிழை வளர்த்த முறைதான் சரியில்லையா?
தொன்று தொட்டுத் தமிழை வளர்த்தவர் சரியில்லையா?
இன்று தமிழை வளர்க்கிறோம் எனக்கூறும் தமிழர்தாம் சரியில்லையா?
ஆக மொத்தத்தில் இத்தரணியில்!!!
சங்கம் வைத்துப் பேணி வளர்த்த தமிழும்
கண்ணிமைக்காமல் காணக்கிடந்த கலையும்
பண்டைய நாகரீகத்தில் உரமேறிய நம் பண்பாடும்
காலங் காலமாய் கட்டிக்காத்த தமிழர்களின் கலாச்சாரமும்
கண்டவர்
நகைத்திடக்
காரணம் என்ன?
காரணகர்த்தா யார்?
தமிழ் சோறு போடுமா என்ற எண்ணமா???
தமிழ் படிச்சி என்னத்த கிழிக்கப்போறான் என்ற வெட்டிப் பேச்சா???
அதிகாரத்தால்!!!
ஆணவத்தாண்டவமாடும் சில அரசியல்வாதிகளா???
ஆணவத்தால்!!!
ஆசிரியரையே அடிக்கியாளும் சில தலைமையாசிரியரா???
அக்கறையின்றி!!!
ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காகக் கோலெடுத்தாடும் சில ஆசிரியரா???
பொறுப்பின்றி!!!
ஏதோ நாலெழுத்துப் படிச்சா போதுமெனும் சில பொறுப்பற்ற பெற்றோரா???
நம்பிக்கையின்றி!!!
என்னத்த படிச்சி என்னத்த கிழிக்கப்போறோமெனும் சில சோம்பேறிப் பிள்ளைகளாக???
அதிகாரத்தால்!!!
ஆணவத்தால்!!!
அக்கறையின்றி!!!
பொறுப்பின்றி!!!
நம்பிக்கையின்றி!!!
இத்தரணியில் நடமாடும் ஜடங்கள்
குறைந்தபட்சம் திருந்தனும்!!!
அதிகபட்சம் விரைவில்
மரணிக்கனும்!!!
ஆக்கம்,
ஷா ஆலாம் முபா.செல்வராஜா
ஷா ஆலாம், சிலாங்கூர், மலேசியா.